எரிசக்தி அமைச்சகம்
புதுப்பிக்கப்பட்ட மின் விநியோகத் துறை திட்டத்தின் கீழ் 37,000 கோடி ரூபாய் விடுவிப்பு
प्रविष्टि तिथि:
04 DEC 2025 4:51PM by PIB Chennai
நிதி ரீதியாக நிலையான, செயல்பாட்டு ரீதியாக திறமையான மின் விநியோகத்துறை மூலம் நுகர்வோருக்கு மின் விநியோகத்தின் தரத்தையும் நம்பகத்தன்மையையும் மேம்படுத்தும் நோக்கத்துடன் மத்திய அரசு புதுப்பிக்கப்பட்ட மின் விநியோகத் துறை திட்டத்தை (RDSS) தொடங்கியது.
இதுவரை இந்தத் திட்டத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட மொத்த மத்திய மானியம் சுமார் 37,000 கோடி ரூபாய் ஆகும். இது இந்தத் திட்டத்திற்கு அனுமதிக்கப்பட்ட மொத்த பட்ஜெட் ஆதரவில் சுமார் 38% ஆகும்.
இந்தத் திட்டத்தின் கீழ் நிதியை விடுவிப்பது மின் விநியோக நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பொறுத்து அமையும்.
இன்றைய தேதி வரை, விநியோக உள்கட்டமைப்பு பணிகள் தொடர்பாக எந்தவொரு மாநிலத்திலிருந்தும் எந்தவொரு கோரிக்கையும் இந்த அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக நிலுவையில் இல்லை.
இந்தத் தகவலை மத்திய மின் துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபத் யெஸ்ஸோ நாயக் இன்று (04.12.2025) மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
(Release ID: 2198782)
****
AD/PLM/SH
(रिलीज़ आईडी: 2199148)
आगंतुक पटल : 5