அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

சிஆர்ஆர்ஐ-ன் போக்குவரத்து ஆய்வு

प्रविष्टि तिथि: 04 DEC 2025 4:30PM by PIB Chennai

அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் ஒரு அங்கமான புதுதில்லியில் சிஎஸ்ஐஆர்-ன் கீழ் இயங்கும் மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனமான சிஆர்ஆர்ஐ (CRRI), கடந்த மூன்று ஆண்டுகளில் சாலைப் போக்குவரத்துத் துறைக்கான நிலையான, புதுமையான தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. சாலைக் கட்டுமானத்திற்கான எஃகு கசடுகளை மதிப்பிடுதல் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

இந்த நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்புகள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் முன்னோடித் திட்டங்களின் பயன்பாடுகளாக மாறியுள்ளன.

மாநில அரசுகளின் நெடுஞ்சாலைத் துறைகளாலும், பிற சாலை நிறுவனங்களாலும் அவை ஏற்றுக்கொள்ளப்படுவதோடு, தொழில்நுட்ப பரிமாற்றம், வணிக மேம்பாட்டு வழிமுறைகள் ஆகியவை மூலம் தொழில்நுட்பங்கள் விரிவுபடுத்தப்படுகின்றன. தொழில் அமைப்புகள், போக்குவரத்து அமைப்புகள், அரசு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கோள்ளப்படுகின்றன.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று (04.12. 2025) எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் திரு ஜிதேந்திரசிங் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.

(Release ID: 2198762)

****

AD/PLM/SH


(रिलीज़ आईडी: 2199143) आगंतुक पटल : 41
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी