விண்வெளித்துறை
azadi ka amrit mahotsav

இஸ்ரோவின் அடுத்துவரும் திட்டங்கள்

प्रविष्टि तिथि: 04 DEC 2025 4:28PM by PIB Chennai

மத்திய விண்வெளித் துறை மார்ச் 2026-க்குள் ஏழு முக்கிய திட்டங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

1. எல்விஎம்3 எம்6/என்எஸ்ஐஎல் - பிரத்யேக வணிக ரீதியிலான செயற்கைக் கோள் செலுத்தும் திட்டம்

2. பிஎஸ்எல்வி சி 62/ இஓஎஸ் என்1 - புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் செலுத்துதல்.

3. எச்எல்விஎம்3 ஜி1/ ஓஎம்1்- ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதி

4. ஜிஎஸ்எல்வி எஃப்17/இஓஎஸ்-05 -  புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை செலுத்துதல்.

5. பிஎஸ்எல்வி சி63/டிடிஎஸ்-01

உயர் உந்துவிசை மின்சார உந்துவிசை அமைப்பு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை நிரூபிக்கும் செயற்கைக்கோள்.

6. பிஎஸ்எல்வி என்1/ இஓஎஸ்-10 - கடல் சார் ஆய்வுக்கான செயற்கைக்கோள்.

7. எஸ்எஸ்எல்வி எல்1/ என்எஸ்ஐஎல் -நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனத்தின் (என்எஸ்ஐஎல்) பிரத்யேக வணிக செயற்கைக் கோள்.

விண்வெளித் துறையில் சீர்திருத்தங்களுக்குப் பிறகு, நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NSIL) நிறுவனம், வணிக செயற்கைக்கோள் பயன்பாடுகளின் வெற்றியை உறுதி செய்வதற்கும், உலகளாவிய விண்வெளி சந்தையில் இந்தியாவின் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதற்காக, வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, தேவை சார்ந்த முறையில் வணிக செயற்கைக்கோள் பணிகளை என்எஸ்ஐஎல் மேற்கொண்டுள்ளது.

 

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் இன்று (04.12.2025) அளித்த பதிலில் மத்திய விண்வெளித் துறை இணையமைச்சர் திரு ஜிதேந்திர சிங் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.

 

(Release ID 2198757)

****

AD/PLM/KPG/SH


(रिलीज़ आईडी: 2199122) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu