உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி
प्रविष्टि तिथि:
04 DEC 2025 3:15PM by PIB Chennai
2020-21 முதல் 2024-25 வரையிலான ஆண்டுகளில் இயற்கை வேளாண் உணவுப் பொருட்களின் ஏற்றுமதி சரிந்துள்ளது.
*2020-21-ம் ஆண்டில் 888179.68 மெட்ரிக் டன் இயற்கை வேளாண் பொருட்கள் 1040.95 மில்லியன் டாலர் மதிப்பில் ஏற்றுமதி செய்யப்பட்டன.
*2024-25-ம் ஆண்டில் 368155.04 மெட்ரிக் டன் பொருட்கள் 665.97 மில்லியன் டாலர் மதிப்பில் ஏற்றுமதி செய்யப்பட்டன.
உலக சந்தையில் குறைந்த தேவை, உலக அளவில் நிச்சயமற்ற சந்தைகள் தன்மைகள், புவிசார் அரசியல் பதற்றங்கள் போன்ற சிக்கல்கள் காரணமாக இந்தியாவில் இருந்து இயற்கை வேளாண் உணவு ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளது.
வர்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமான அபேடா இயற்கை உணவுப் பொருட்களின் ஏற்றுமதியாளர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்குகிறது:
மேலும், அபேடா தேசிய இயற்கை வேளாண் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்துகிறது. இந்த திட்டத்தில் தரநிலைகளை உறுதி செய்தல், சந்தைப்படுத்தலை ஊக்குவித்தல் போன்றவை அடங்கும். இத்திட்டத்தின் கீழ், உற்பத்தி, பதப்படுத்துதல், வர்த்தகம் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சான்றளிக்கப்படுகிறது.
விவசாயிகளுக்கு சிறந்த வருமானத்தை வழங்குதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், உணவுப் பொருட்கள் வீணாவதைக் குறைத்தல், பதப்படுத்தும் அளவை அதிகரித்தல்,உள்ளிட்ட நடவடிக்கைகள் உட்பட பதப்படுத்தப்பட்ட உணவுகளின் ஏற்றுமதியை மேம்படுத்துதலை நோக்கமாகக் கொண்டு உணவு பதப்படுத்தும் தொழில்கள் துறை, பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துகிறது.
இந்தத் தகவலை உணவு பதப்படுத்தும் தொழில்கள் துறை இணையமைச்சர் திரு ரவ்னீத் சிங் இன்று (04.12.2025) மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
(Release ID: 2198689)
****
AD/PLM/KPG/SH
(रिलीज़ आईडी: 2199115)
आगंतुक पटल : 3