தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் டிசம்பர் 4 வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்

प्रविष्टि तिथि: 04 DEC 2025 3:33PM by PIB Chennai

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தமிழ்நாடு, அந்தமான் நிக்கோபார், சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவு, மத்தியப்பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2025 நவம்பர் 4 அன்று தொடங்கி டிசம்பர் 11 வரை நடைபெறுகிறது.

2025 அக்டோபர் 27-ன் படி, இம்மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 50,97,44,423 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 50,90,65,498 கணக்கெடுப்பு படிவங்கள் (99.87%) இதுவரை (2025 டிசம்பர் 4) விநியோகிக்கப்பட்டுள்ளன. இப்பணிகளுக்காக 5,32,828 வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள், 12,43,201 முகவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவற்றில் 48,37,70,977 கணக்கெடுப்பு படிவங்கள் டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் 6,41,14,587 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 6,39,31,564 கணக்கெடுப்பு படிவங்கள் (99.71%) இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 6,23,54,263 கணக்கெடுப்பு படிவங்கள் டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 68,470 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் 2,46,069 வாக்குச்சாவடி முகவர்களும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரியில் 10,21,578 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 10,20,316 படிவங்கள் (99.88%) விநியோகிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 10,04,619 கணக்கெடுப்பு படிவங்கள் டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2198712&reg=3&lang=1

---

 

AD/IR/KPG/SH


(रिलीज़ आईडी: 2198970) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी