சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
பொது தளங்களில் கிடைக்கும் பதிவுகளை டிஜிட்டல்மயமாக்குதல்
प्रविष्टि तिथि:
04 DEC 2025 1:42PM by PIB Chennai
தேசிய மின்-ஆளுகைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, நீதித்துறையில் தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக 7210 கோடி ரூபாய் செலவில் மின்-நீதிமன்றங்கள் திட்டத்தின் மூன்றாம் கட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்ப வசதியுடன் நீதித்துறை அமைப்பை மாற்றி அமைப்பதும், நீதித்துறை செயல்பாட்டை தரத்தின் ரீதியாகவும் அளவின் ரீதியாகவும் மேம்படுத்துவதும், நீதி வழங்கும் முறையை சிறப்பானதாக மாற்றுவதும் இதன் தொலைநோக்குப் பார்வைகளாகும்.
நீதிமன்றப் பதிவுகளை ஸ்கேன் செய்தல், சேமித்தல், நீதிமன்றப் பதிவுகளை டிஜிட்டல்மயமாக்குதல் ஆகியவற்றிற்காக இந்திய உச்ச நீதிமன்றத்தின் டிஜிட்டல் செயல்பாட்டுக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் செயல்பாட்டில் உள்ளன. டிஜிட்டல் மயமாக்கத்திற்காக மின் நீதிமன்றத் திட்டத்தின் 3ம் கட்டத்தின் கீழ் 2038.40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் டிஜிட்டல் செயல்பாட்டுக் குழு வழங்கிய விவரங்களின்படி, உயர் நீதிமன்றங்கள், துணை நீதிமன்றங்கள் ஆகியவற்றில் முறையே 224 கோடி மற்றும் 354 கோடி பக்கங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.
மின் நீதிமன்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நீதிமன்றங்களின் பதிவுகள், தீர்ப்புகள், உத்தரவுகள் பொதுமக்களுக்கு டிஜிட்டல் முறையில் கிடைக்கச் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆவணங்களை www.hcservices.ecourts.gov.in உள்ளிட்ட வலைத்தளங்களிலும் மொபைல் செயலிகள் மூலமும் பார்க்கலாம் . உச்ச நீதிமன்றத்தைப் பொறுத்தவரை, அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.sci.gov.in-ல் பதிவுகள் உள்ளன .
இந்தத் தகவலை மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் இன்று (04.12.2025) மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2198646®=3&lang=1
***
AD/PLM/KR
(रिलीज़ आईडी: 2198851)
आगंतुक पटल : 5