தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய தகவல் அகாடமி – நிதி பயிற்சி நிறுவனம் ஊதா திருவிழா

प्रविष्टि तिथि: 04 DEC 2025 11:37AM by PIB Chennai

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையுடன் இணைந்து தொலைத்தொடர்புத் துறையின் கீழ், தேசிய தகவல் அகாடமி – நிதி பயிற்சி நிறுவனம் 2025 டிசம்பர் 3 அன்று ஊதா திருவிழா 2025-ஐ தில்லி அருகே உள்ள கிட்டோர்னியில் கொண்டாடியது.

இத்திருவிழாவைத் தொடங்கிவைத்துப் பேசிய மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை செயலாளர் வி வித்யாவதி, மனநல தடைகளைக் களைந்து அனைத்தையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் அகில இந்திய மற்றும் மத்திய குடிமைப்பணியைச் சேர்ந்த 176 பயிற்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் தொழில் முனைவோர்களின் அரங்குகளும் கண்காட்சிகளும் நடைபெற்றன. இதில், விருந்தினர்கள், தேசிய தகவல் அகாடமி – நிதி பணியாளர்கள், பயிற்சி அதிகாரிகள், குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களது பங்களிப்பு தொழில் முனைவோர் மற்றும் படைப்பாளர்களுக்கு நிதி அதிகாரம் அளித்தலுக்கான அங்கீகாரம் மற்றும் வழிவகைகளை அளித்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2198610&reg=3&lang=1

 

---

AD/IR/KPG/KR


(रिलीज़ आईडी: 2198730) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी