அணுசக்தி அமைச்சகம்
அணு உலைகள் தொடங்குவதில் தாமதத்திற்கான காரணங்கள்
प्रविष्टि तिथि:
03 DEC 2025 6:36PM by PIB Chennai
ஜப்பானில் உள்ள ஃபுகுஷிமா விபத்து குறித்த முழுமையான பகுப்பாய்வின் விளைவாக, விரிவான வடிவமைப்பு மதிப்பாய்வுகள் மற்றும் புதிய மேம்பாடுகளைச் சேர்ப்பதன் காரணமாக, ராஜஸ்தான் அணுமின் திட்டமான ஆர்ஏபிபி-8 (700 மெகாவாட்) -ன் நிறைவு/செயல்படுத்தல் தாமதமாகிறது. ரஷ்ய-உக்ரைன் மோதல் மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் குவாரி செயல்பாடுகள் நிறுத்தப்பட்டதால் பாறை சார்ந்த பொருட்கள் கிடைக்காததால் மற்றொரு திட்டமான கூடங்குளம் அணுமின் திட்டமான கேகேஎன்பிபி-3&4 (2 X 1000 மெகாவாட்) தாமதமாகியுள்ளது. கூடுதலாக, ஒப்பந்ததாரர்களின் நிதி நெருக்கடி மற்றும் கோவிட் 19 பெருந்தொற்றின் தாக்கமும் திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதத்திற்கு காரணமானது.
தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் உள்ள 500 மெகாவாட் மாதிரி விரைவு ஈனுலை, அதன் முதல் நிலைக்கு உள்ளார்ந்த கட்டுமானம் மற்றும் செயல்படுத்தல் கட்டத்தில் தாமதங்களை சந்தித்துள்ளது. தாமதத்திற்கு வழிவகுக்கும் இந்த தொழில்நுட்ப சவால்கள் முறையான வகையில் வெற்றிகரமாக சமாளிக்கப்பட்டன. தற்போது, முதல் படியாக எரிபொருள் ஏற்றும் பணி நடந்து வருகிறது. திட்டத்தின் இயல் முன்னேற்றம் 97.90% ஆகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2198334®=3&lang=1
***
(Release ID: 2198334)
AD/BR/KR
(रिलीज़ आईडी: 2198701)
आगंतुक पटल : 27