வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தட்சிண கன்னட மாவட்டம் ஏற்றுமதி மையமாக அறிவிப்பு: மத்திய அமைச்சர் தகவல்

प्रविष्टि तिथि: 02 DEC 2025 5:07PM by PIB Chennai

'மாவட்டங்களை ஏற்றுமதி மையமாக' (DEH) மாற்றும் மத்திய அரசின்  முன்முயற்சியின் கீழ், தட்சிண கன்னட மாவட்டம் ஒரு ஏற்றுமதி மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடல் உணவுகள் மற்றும் முந்திரி ஆகியன இப்பகுதியின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களாக அடையாளப்படுத்தப் பட்டுள்ளன. இது, உள்ளூர் தொழில்துறையை வலுப்படுத்தவும், உலக வர்த்தகத்தில் பங்கேற்பை அதிகரிக்கவும் உதவும்.

ஏற்றுமதிச் சவால்களைச் சமாளிக்க, மாவட்ட ஏற்றுமதி செயல் திட்டம்  வகுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தளவாடப் போக்குவரத்து  இடைவெளிகள், சேமிப்புக் கிடங்குப் பற்றாக்குறைகள், துறைமுக இணைப்பு மேம்பாடு போன்றவை கண்டறியப்பட்டுள்ளன. மேலும், ஒருங்கிணைந்த நடவடிக்கைகளுக்காக மாவட்ட ஏற்றுமதி ஊக்குவிப்புக் குழு (DEPC) அமைக்கப்பட்டுள்ளது. இம்முயற்சிகள் மூலம் புது மங்களூர் துறைமுகத்துடனான இணைப்பு பலப்படுத்தப்படும்.

 மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் திரு. ஜிதின் பிரசாதா இன்று (02 டிசம்பர் 2025) மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்தார்.

 மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்

 https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2197651&reg=3&lang=1

****

AD/VK/SH


(रिलीज़ आईडी: 2197926) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Kannada