பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பஞ்சாயத்து ராஜ் நிறுவனம்

இடுகை இடப்பட்ட நாள்: 02 DEC 2025 3:30PM by PIB Chennai

“பஞ்சாயத்து” என்பது ஒரு மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. மத்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின் மாநிலப் பட்டியலின் ஒரு பகுதியாகும். பஞ்சாயத்துகள் அந்தந்த மாநில பஞ்சாயத்து ராஜ் சட்டங்கள் மூலம் அமைக்கப்பட்டு செயல்படுகின்றன, அவை அரசியலமைப்பின் விதிகளுக்கு உட்பட்டு, மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடலாம்.

இருப்பினும், இந்திய அரசியலமைப்பின் பிரிவு 280, மத்திய நிதி ஆணையங்கள், மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் அவற்றின் உள்ளூர் அமைப்புகளின் நிதி நிலையை மதிப்பிடுவதற்கும், மாநிலங்கள் மற்றும் உள்ளூர் அமைப்புகளுக்கு பல்வேறு நோக்கங்களுக்காக வரிகள் மற்றும் மானியங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் பரிந்துரைப்பதற்கான அடிப்படையை வழங்குகிறது. சம்பளம் அல்லது பிற நிறுவனச் செலவுகளைத் தவிர, அரசியலமைப்பின் பதினொன்றாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 29 தேவைகளுக்கு கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் நிதி ஆணைய மானியத்தைப் பயன்படுத்தலாம்.

மாநிலங்களில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மத்திய நிதி ஆணைய மானியங்கள் 13-வது நிதி ஆணையத்திலிருந்து 15-வது நிதி ஆணையம் வரை தொடர்ந்து அதிகரித்துள்ளன. 13-வது நிதி ஆணையத்தின் (நிதியாண்டு 2010-2015) கீழ் ஒதுக்கீடுகள் ரூ. 64,408 கோடியாகவும், 15-வது நிதி ஆணையத்தின் (நிதியாண்டு 2021-2026) கீழ் ஒதுக்கீடு ரூ. 2,36,805 கோடியாகவும் உள்ளது. இது 13-வது நிதி ஆணைய ஒதுக்கீட்டை விட சுமார் 4 மடங்கு அதிகமாகும்.

இந்தத் தகவலை மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு. ராஜீவ் ரஞ்சன் சிங் (எ) லாலன் சிங் மக்களவையில் இன்று (02 டிசம்பர் 2025) எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2197538&reg=3&lang=1

***

AD/PVK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2197869) வருகையாளர் எண்ணிக்கை : 38
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी