ஊரக வளர்ச்சி அமைச்சகம்
தில்லியில் உணவுத் திருவிழாவை மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் தொடங்கி வைத்தார்
प्रविष्टि तिथि:
01 DEC 2025 8:30PM by PIB Chennai
புதுதில்லியில் உணவுத்திருவிழா 2025-ஐ மத்திய ஊரக மேம்பாடு, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் இன்று தொடங்கி வைத்தார். மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி அன்னபூரணா தேவியும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான், நமது லட்சாதிபதி சகோதரிகள் தங்களது மகத்தான சக்தியை நிரூபித்துள்ளதாக கூறினார். உண்மையில் தங்களது கடின உழைப்பால், வளர்ச்சி, மேம்பாடு மற்றும் வளமையின் புதிய சகாப்தத்தைப் படைத்துள்ளதாகத் தெரிவித்தார். தற்போது 25 மாநிலங்களைச் சேர்ந்த லட்சாதிபதி சகோதரிகளில் பலர் தங்களின் சிறப்புகள், கடின உழைப்பு, அர்ப்பணிப்புடன் ஒட்டுமொத்த நாட்டிற்கும் வழிகாட்டுவதாக கூறினார்.
நமது சகோதரிகளின் மேம்பாட்டிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி உறுதி பூண்டுள்ளதாகவும் அக்கனவை நிறைவேற்ற மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் திரு சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2197440®=3&lang=1
***
AD/IR/KPG/RK
(रिलीज़ आईडी: 2197573)
आगंतुक पटल : 61