ஜல்சக்தி அமைச்சகம்
ஒடிசாவில் நிலத்தடி நீர்மட்டம் குறைவு மற்றும் குடிநீருக்கு பற்றாக்குறை: மத்திய அரசு
प्रविष्टि तिथि:
01 DEC 2025 4:30PM by PIB Chennai
ஒடிசாவில் நிலவும் நீடித்த குடிநீர் பற்றாக்குறை மற்றும் நிலத்தடி நீர் குறைவு குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் திரு வி. சோமண்ணா பதிலளித்தார்.
ஒடிசாவின் சில பகுதிகளில் நிலத்தடி நீர் குறைவு, இரும்பு, ஃபுளோரைடு மற்றும் உப்புத்தன்மை போன்ற அசுத்தங்கள் காரணமாகக் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதாகத் தெரிவித்தார். இதற்குத் தீர்வாக, ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் மெகா குழாய்நீர் திட்டங்கள் மற்றும் அசுத்தங்களை நீக்கும் ஆலைகள் நிறுவப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.
எனினும், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் நெடுஞ்சாலைகள், ரயில்வே போன்ற துறைகளிடம் அனுமதி பெறுவதில் தாமதம் போன்ற காரணங்களால் 705 பல கிராமத் திட்டங்கள் காலதாமதமாகியுள்ளன. இவற்றை விரைவுபடுத்த, ஒடிசா அரசு உயர்மட்டக் குழுக்களை அமைத்து, தாமதத்திற்குக் காரணமான ஒப்பந்தக்காரர்களுக்கு அபராதம் விதித்து, பணிகளை முடுக்கிவிட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2196984®=3&lang=1
***
AD/VK/RK
(रिलीज़ आईडी: 2197549)
आगंतुक पटल : 3