ஜல்சக்தி அமைச்சகம்
நீர் மேலாண்மை மற்றும் பாதுகாப்பில் தொழில்நுட்பப் பயன்பாடு: அமைச்சர் தகவல்
प्रविष्टि तिथि:
01 DEC 2025 7:17PM by PIB Chennai
மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ், நீர் மேலாண்மை மற்றும் பாதுகாப்பிற்காகப் பல்வேறு தொழில்நுட்பம் சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்று மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் திரு. ராஜ் பூஷண் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
இன்று மாநிலங்களவையில் இதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், பிரதமரின் அடல் நிலத்தடி நீர்த் திட்டம் என்பது சமூகப் பங்களிப்புடன் நிலத்தடி நீர் மேலாண்மையை மேம்படுத்த ஏழு மாநிலங்களில் உள்ள 8,203 கிராமப் பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்படுகிறது என்று கூறினார்.
மழை நீரை சேகரிப்போம் திட்டத்தின் கீழ், அறிவியல் ரீதியிலான நீர் பாதுகாப்புத் திட்டங்களைத் தயாரிக்க வசதியாக, நீர்நிலைகள் முறையாகக் கணக்கெடுக்கப்பட்டு, அவற்றிற்கு புவியியல் குறியீடு தரப்படுகிறது.
மாவட்ட ஆட்சியர்கள் பழைய வருவாய்த் தரவுகள், தொலை உணர்வு மற்றும் புவியியல் தகவல் அமைப்பு (ஜிஐஎஸ்) போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நீர்நிலைகளை வரைபடமாக்குகின்றனர்.
ஜல் தரோகர் என்ற ஜிஐஎஸ் அடிப்படையிலான துணை இணையதளம், நாட்டின் நீர்நிலைகள் குறித்த ஒருங்கிணைந்த புவியியல் குறியீட்டுத் தரவுத்தளத்தை வழங்குகிறது என்ற தகவலையும் அமைச்சர் தெரிவித்தார்.
முக்கியத் தொழில்நுட்ப முயற்சிகளாக, தேசிய நீர்ப்பரப்பு வரைபடத் திட்டத்தின் கீழ் நிலத்தடி நீர் வாரியம் தொலையுணர்வு மூலம் நீர்ப்பரப்புகளுக்கு வரைபடம் தயாரித்து செறிவூட்டல் மண்டலங்களைக் கண்டறிகிறது. மேலும், 23,000 டிஜிட்டல் நீர்மட்டப் பதிவுக் கருவிகள் மூலம் நிலத்தடி நீர்மட்டம் நிகழ்நேரத்தில் கண்காணிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மத்திய நீர்வள ஆணையத்தின் ‘ஃப்ளட் வாட்ச் இந்தியா’ செயலி மூலம் 592 கண்காணிப்பு நிலையங்கள் மற்றும் 150 பெரிய நீர்த்தேக்கங்களின் வெள்ளம் மற்றும் நீர் இருப்பு நிலை கண்காணிக்கப்படுகிறது என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2197186®=3&lang=2
***
AD/VK/RK
(रिलीज़ आईडी: 2197542)
आगंतुक पटल : 4