ஜல்சக்தி அமைச்சகம்
கர்நாடகாவில் நிலத்தடி நீர் வளமும் 'ஜல் சக்தி' திட்டங்களும்
प्रविष्टि तिथि:
01 DEC 2025 7:15PM by PIB Chennai
மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் 2025-ம் ஆண்டு மதிப்பீட்டின்படி, கர்நாடகாவில் 5 மாவட்டங்கள் அதிகமாக நிலத்தடி நீர்வளத்தை உறிஞ்சியுள்ளன. 2 மாவட்டங்கள் 'அபாயகரமானவை' என்றும் 6 மாவட்டங்கள் 'ஓரளவு அபாயகரமானவை' என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் திரு ராஜ் பூஷன் சௌத்ரி தெரிவித்தார்.
மாநிலங்களவையில் இதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், மத்திய அரசு மழைநீர் சேகரிப்பு மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டலுக்காக ஜல் சக்தி அபியான் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது என்றார்.
2019-ல் தொடங்கப்பட்ட இத்திட்டம், 2021 முதல் நாடு முழுவதும் ஆண்டுதோறும் செயல்படுத்தப்படுகிறது. தற்போது, இந்தத் திட்டம் , நாடு முழுவதும் உள்ள 148 நீர் பற்றாக்குறை மாவட்டங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது என்றும் அவர் கூறினார்.
கர்நாடகாவின் 2024 மதிப்பீட்டின்படி அதிகமாக தண்ணீர் எடுக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களும், 4 அபாயகரமான மாவட்டங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
பிரதமரால் தொடங்கப்பட்ட மழை நீர் சேகரிப்பு திட்டம் என்பது மழைநீர் சேகரிப்பை மக்கள் இயக்கமாக மாற்றும் நோக்குடன், சமூகத்தின் பங்களிப்பை வலியுறுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தத் தொடர்ச்சியான முயற்சிகளின் காரணமாக, கர்நாடகாவில் 17 லட்சத்திற்கும் அதிகமான நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, மாநிலத்தின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
சிக்கபல்லாபுரா, துமகுரு மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்து அபாயகரமான மாவட்டங்களிலும் நிலத்தடி நீர் எடுப்பு நிலை மேம்பட்டுள்ளது என்ற தகவலையும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2197180®=3&lang=2
***
AD/VK/RK
(रिलीज़ आईडी: 2197534)
आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English