சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறுபான்மை சமூகப் பெண்கள் வேலைவாய்ப்புக்கான பிரதமரின் பாரம்பரியப் பாதுகாப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது

प्रविष्टि तिथि: 01 DEC 2025 7:01PM by PIB Chennai

சிறுபான்மையினரின் சமூக-பொருளாதார மேம்பாட்டில்  மத்திய அரசு போதுமான கவனம் செலுத்தி வருவதாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு,தெரிவித்தார். 

இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில்  இதனை தெரிவித்த அவர் இதற்காக மத்திய அரசு செயல்படுத்திவரும் திட்டங்களை பட்டியலிட்டார்.  

சிறுபான்மை சமூகங்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காக, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் பிரதமரின் பாரம்பரியப் பாதுகாப்பு மேம்பாட்டுத் திட்டத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

திறன் மேம்பாடு, சிறுபான்மை மகளிரிடையே தொழில்முனைவை ஊக்குவித்தல், பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தியவர்களுக்கான கல்வி ஆதரவு ஆகியவற்றில் இத்திட்டம் கவனம் செலுத்துகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன் முக்கிய நோக்கங்களாக, சிறுபான்மை சமூகங்களுக்குத் தேவையான திறன் பயிற்சி அளித்து வேலைவாய்ப்புகளை உறுதிசெய்வது, அவர்களின் பாரம்பரியக் கலை, கைவினை வடிவங்கள் உட்பட கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பது, பெண்களுக்குத் தலைமைத்துவப் பயிற்சி மற்றும் தொழில்முனைவு ஆதரவு அளித்து அவர்களுக்கு அதிகாரம் அளிப்பது, சந்தை / கடன் இணைப்புகள் மூலம் வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்துவது ஆகியவை உள்ளன என்றும் அவர் கூறினார்.

இத்திட்டத்தின் மொத்த இடங்களில் 3 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்கள், நவீன திறன் பயிற்சிகளின் கீழ் குறைந்தபட்சம் 75 சதவீத பயிற்சி பெற்ற பயனாளிகளுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு மேலும் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2197162&reg=3&lang=2

***

AD/VK/RK


(रिलीज़ आईडी: 2197530) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी