பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஏர் மார்ஷல் தேஜ்பீர் சிங், விமானப்படையின் தலைமை இயக்குநராக (ஆய்வு மற்றும் பாதுகாப்பு) பொறுப்பேற்றார்

प्रविष्टि तिथि: 01 DEC 2025 7:40PM by PIB Chennai

டிசம்பர் 01, 2025 அன்று, ஏர் மார்ஷல் தேஜ்பீர் சிங், விமானப்படை தலைமையகத்தில் தலைமை இயக்குநராகப் (ஆய்வு மற்றும் பாதுகாப்பு) பொறுப்பேற்றார்.

37 ஆண்டுகால தனது சிறப்பான விமானப்படை சேவையில், விமான அதிகாரி, புது தில்லி தேசிய பாதுகாப்பு கல்லூரி மற்றும் விமானப்படை தலைமையகத்தில் விமானப்படை செயல்பாடுகளின் உதவித் தலைவர் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார். அவர் இங்கிலாந்தின் ராயல் காலேஜ் ஆஃப் டிஃபென்ஸ் ஸ்டடீஸின் முன்னாள் மாணவர் ஆவார்.

ஏர் மார்ஷல் தேஜ்பீர் சிங், பரந்த செயல்பாட்டு அனுபவத்தைக் கொண்டிருப்பதுடன், 7000 மணி நேரத்திற்கும் மேலாக விமானப் பயணத்தில் அனுபவம் பெற்றுள்ளார். அவரது சிறப்பான சேவையைப் பாராட்டி, ஏர் மார்ஷல் தேஜ்பீர் சிங்கிற்கு 2010 இல் வாயு சேனா பதக்கமும், 2018 இல் அதி விசிஷ்ட் சேவா பதக்கமும் வழங்கப்பட்டது.

39 ஆண்டுகால சிறப்புமிக்க சேவைக்குப் பிறகு நவம்பர் 30, 2025 அன்று ஓய்வு பெற்ற ஏர் மார்ஷல் மகரந்த் பாஸ்கர் ரனடேவுக்குப் பிறகு ஏர் மார்ஷல் தேஜ்பீர் சிங், அவரது பதவியை ஏற்றுள்ளார்

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2197204&reg=3&lang=2

(Release ID: 2197204)

****

AD/BR/SH


(रिलीज़ आईडी: 2197327) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी