ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜல் ஜீவன் இயக்கத்தின் விரிவாக்கம் மற்றும் அமலாக்க நிலவரம்

प्रविष्टि तिथि: 01 DEC 2025 4:34PM by PIB Chennai

2019 ஆகஸ்ட் முதல், மத்திய அரசு, அசாம் உள்ளிட்ட மாநிலங்களுடன் இணைந்து, நாட்டின் ஒவ்வொரு கிராமப்புற வீட்டிற்கும் குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வழங்குவதற்காக ஜல் ஜீவன் இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த இயக்கத்தின் கீழ் அசாமில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து, மொத்தம் 72,24,242 கிராமப்புற வீடுகளில், 57,87,327 வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி, மாநிலத்தில் மொத்தம் 58,98,638 வீடுகள் குழாய் இணைப்புகளைக் கொண்டுள்ளன.

ஜல் ஜீவன் இயக்கம் தொடங்கப்பட்ட நேரத்தில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ. 2,08,652 கோடி மத்திய செலவினத்துடன் மத்திய அரசு ஆதரவை அங்கீகரித்தது. அங்கீகரிக்கப்பட்ட மத்திய செலவினம் 2024-25 வரை ஏறத்தாழ பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் நடந்து வரும் பணிகளைக் கருத்தில் கொண்டு, 2025-26 பட்ஜெட் அறிவிப்புகள் மூலம் மொத்த செலவினத்தையும் சேர்த்து, ஜல் ஜீவன் இயக்கத்தை டிசம்பர் 2028 வரை நீட்டிப்பதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார். அதன்படி, ஜல் ஜீவன் இயக்கத்தை டிசம்பர் 2028 வரை தொடர்வதற்கான திட்டம் துறையின் பரிசீலனையில் உள்ளது.

இந்தத் தகவலை ஜல் சக்தித்துறை இணையமைச்சர் திரு வி. சோமண்ணா இன்று (01 டிசம்பர் 2025) மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2196992&reg=3&lang=1

****

AD/SMB/SH


(रिलीज़ आईडी: 2197293) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी