சுற்றுலா அமைச்சகம்
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள்
இடுகை இடப்பட்ட நாள்:
01 DEC 2025 3:38PM by PIB Chennai
இந்தியாவிற்கு சுற்றுலா மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணிகளை ஈர்க்கும் வகையில், சுற்றுலாத் தலங்களில் அதன் முக்கியத்துவம் சார்ந்த வகைகளில் மேம்படுத்த ஏதுவாக வியத்தகு இந்தியா 2.0 என்ற முன்முயற்சி நடவடிக்கைகளை மத்திய சுற்றுலா அமைச்சகம் தொடங்கியுள்ளது.
நீடித்த மற்றும் பொறுப்புணர்வுடன் கூடிய சுற்றுலா நடைமுறைகளை உள்ளடக்கிய வகையில் சுற்றுலாத் தளங்களை முழு அளவில் மேம்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய சுற்றுலா அமைச்சகம் ஊக்கமளித்து வருகிறது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள் ஊக்கத்தொகை வழங்குவதற்கான திட்டங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் என சுற்றுலா தளங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக சமூக வலைதளம், இணையதளம் மற்றும் கண்காட்சிகள் உட்பட பல்வேறு ஊடகங்கள் வாயிலாக இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மக்களவையில் இன்று (01 டிசம்பர் 2025) கேள்வி ஒன்றுக்கு மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2196915®=3&lang=1
****
SS/SV/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2197272)
வருகையாளர் எண்ணிக்கை : 43