தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
இ-ஷ்ரம் தளத்தில் இதுவரை 31.38 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்- மத்திய இணையமைச்சர் செல்வி ஷோபா கரந்தலஜே
प्रविष्टि तिथि:
01 DEC 2025 3:46PM by PIB Chennai
அமைப்பு சாரா தொழிலாளர்கள், தற்காலிக (கிக்) மற்றும் சாலையோர தொழிலாளர்கள் ஆகியோரை பதிவு செய்ய 2021 ஆகஸ்ட் 26 அன்று, இ-ஷ்ரம் (தேசிய அமைப்புசாரா தொழிலாளர்கள் தரவு) தளத்தை, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தொடங்கியுள்ளது.
2025 நவம்பர் மாதம் வரை 31.38 கோடி அமைப்புசாரா தொழிலாளர்களும், 5,09 லட்சம் தற்காலிக (கிக்) மற்றும் சாலையோர தொழிலாளர்களும், இ-ஷ்ரம் தளத்தில் பதிவு செய்துள்ளனர். இதுவரை பல்வேறு மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் 14 திட்டங்கள் ஏற்கனவே இ-ஷ்ரம் தளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு, சுகாதார பயன்கள், நல்வாழ்வு திட்டங்கள் ஆகியவற்றை வழங்குவதற்காக இது உருவாக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணையமைச்சர் செல்வி. ஷோபா கரந்தலஜே மக்களவையில் இன்று (01 டிசம்பர் 2025) எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2196927®=3&lang=1
****
AD/IR/LDN/SH
(रिलीज़ आईडी: 2197226)
आगंतुक पटल : 6