ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை 2025 நவம்பர் 1 முதல் 30 வரை டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் இயக்கம் 4.0-ஐ வெற்றிகரமாக முடித்துள்ளது. குறிப்பாக மிக மூத்த ஓய்வூதியதாரர்களுக்கு, டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிப்பப்பதை எளிதாக்குவதற்காக தொடங்கப்பட்ட இந்த முயற்சி, புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களுடனும் பரவலான ஒத்துழைப்பைப் பயன்படுத்தி குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்துள்ளது.
இது 1.54 கோடி டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ்களை உருவாக்கியது. 91 லட்சத்திற்கும் அதிகமான டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ்கள், சுமார் 60% , முக அங்கீகார தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டன. டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் 3.0 இயக்கத்தை விட இது 230 மடங்கு அதிகமாகும். இந்தப் புரட்சிகரமான தொழில்நுட்பம் மங்கலான கைரேகைகளைக் கொண்ட வயதான ஓய்வூதியதாரர்கள், போக்குவரத்து சவால்களை எதிர்கொள்ளும் மாற்றுத்திறனாளிகள், கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் ஓய்வூதியதாரர்களுக்கு குறிப்பாக பயனுள்ளதாக இருந்தது.
தமிழ்நாடு: புதுமையான மக்கள் தொடர்பு உத்திகள் மூலம் 12.64 லட்சம் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ்களை உருவாக்கியது.
மகாராஷ்டிரா: வலுவான ஒருங்கிணைப்பு மற்றும் பொது விழிப்புணர்வு இயக்கங்கள் மூலம் 21.87 லட்சம் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ்களை எட்டியது.
உத்தரபிரதேசம்: 12.79 லட்சம் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ்களை உருவாக்கியது, தொலைதூரப் பகுதிகளில் கூட அணுகலை உறுதி செய்தது.
மேற்கு வங்கம்: 10.91 லட்சம் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ்களை சமர்ப்பித்தது.
ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறையின் மூத்த அதிகாரிகள் 17 மாநிலங்களில் கள ஆய்வுகளை மேற்கொண்டனர். 5 மெகா முகாம்களில் (தில்லியில் 3, அகமதாபாதில் 1, சென்னையில் 1) கலந்து கொண்டு இத்திட்டம் சீராக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்தனர்.
ஊடக பிரச்சாரங்கள் செய்தியை விரிவாக்கின; 71 பிஐபி அறிக்கைகள் மற்றும் 2900+ ட்வீட்கள், டிடி நியூஸ் மற்றும் நாடாளுமன்றத் தொலைக்காட்சி விவாதங்கள், அத்துடன் ஆகாசவாணி (வானொலி) ஒலிபரப்புகள், என பாரம்பரிய மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள் மூலம் 2 கோடிக்கும் அதிகமான மக்களைச் சென்றடைந்தன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2196906®=3&lang=1
***
SS/SMB/SH