புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய புள்ளியியல் அமைச்சகத்தால் தயாரிக்கப்படும் அதிகாரப்பூர்வ தரவுகளைப் பயனாளர்களுக்கு வழங்குவதற்கான புதிய மொபைல் செயலி

प्रविष्टि तिथि: 01 DEC 2025 1:54PM by PIB Chennai

மத்திய புள்ளியியல் அமைச்சகத்தால் தயாரிக்கப்படும் அதிகாரப்பூர்வ தரவுகளைப் பயனாளர்களுக்கு வழங்குவதற்கான அரசின் புள்ளியியல் தரவுகளுக்கான புதிய மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி ஆன்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் தளங்களிலும் கிடைக்கும். இந்த மொபைல் செயலியை இதுவரை 14,000 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

தேசிய கணக்கு புள்ளியியல், நுகர்வோர் விலைக்குறியீடு, வீட்டு உபயோக நுகர்வு செலவுகள் குறித்த கணக்கீடு காலமுறை தொழிலாளர் எண்ணிக்கை குறித்த ஆய்வு, தொழில் உற்பத்திக்கான குறியீடு, வருடாந்தர தொழில்துறை ஆய்வு, பதிவு செய்யாத நிறுவனங்கள் மற்றும் பொருளாதார கணக்கெடுப்புக் குறித்த வருடாந்தர ஆய்வுகள் உள்ளிட்ட 8 புள்ளியியல் தரவுகள் இந்த மொபைல் செயலி மூலம் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது.  இவை தவிர 11 சமூக பொருளாதார குறியீடுகள் தொடர்பான தரவுகளும் ஆன்ராய்ட் தளத்தில் இந்த செயலி வாயிலாக பெறமுடியும். ஐஓஎஸ் தளத்தில் இந்த செயலி மூலம் 8 புள்ளியியல் தொடர்பான தரவுகள், பொருளாதார கணக்கீடு தவிர இதர பத்து சமூக பொருளாதாரம் குறித்த தரவுகள் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. 

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை இணையமைச்சர் திரு ராவ் இந்தர்ஜித் சிங் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2196835&reg=3&lang=1

***

SS/SV/KPG/SH


(रिलीज़ आईडी: 2197142) आगंतुक पटल : 68
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी