பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு
प्रविष्टि तिथि:
01 DEC 2025 2:42PM by PIB Chennai
பாதுகாப்புத் தளவாட உற்பத்தித் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பாதுகாப்புத் தளவாட சாதனங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உற்பத்திக்கான தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்வதுடன் பொதுத் துறை மற்றும் தனியார் துறைகளுக்கு இடையே போட்டித்தன்மையை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதுகாப்புத் தளவாட சாதனங்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், உற்பத்தி, மேம்பாட்டிற்கான கூட்டு நடவடிக்கைகள், தனியார் தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் முகமைகளை ஊக்குவிக்கும் வகையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இந்த கூட்டு அமைப்பு முறையில், உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக 2,000 தொழில் நிறுவனங்களைக் கொண்ட அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உற்பத்தி சார்ந்த தொழில் நுட்பங்களை இந்த அமைப்பில் உள்ள நிறுவனங்களுடன் எவ்வித கட்டணமின்றி பகிர்ந்து கொள்ளும் வகையில் வகை செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திற்கு சொந்தமான காப்புரிமை கொண்ட தளவாட சாதனங்களின் உற்பத்திக்காக இந்திய நிறுவனங்களுக்கு கட்டணமின்றி அதனை வழங்குவதற்கான கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2196856®=3&lang=1
***
SS/SV/KPG/SH
(रिलीज़ आईडी: 2197124)
आगंतुक पटल : 7