பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்பு அமைச்சகம்: எம்எச்60ஆர் ரக ஹெலிகாப்டர்களின் பல்வேறு செயல்பாடுகளுக்காக அமெரிக்காவுடன் ரூ.7,995 கோடி மதிப்பிலான வழங்கல், ஏற்பு கடிதங்கள் கையெழுத்து
प्रविष्टि तिथि:
28 NOV 2025 3:10PM by PIB Chennai
இந்திய கடற்படைக்குச் சொந்தமான எம்எச்60ஆர் ரக ஹெலிகாப்டர்களின் உதிரிபாகங்கள், பயிற்சி உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளுக்காக அமெரிக்காவுடன் 7,995 கோடி ரூபாய் மதிப்பிலான வழங்கல் மற்றும் ஏற்பு கடிதங்களில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.
அமெரிக்காவின் வெளிநாட்டு ராணுவத் தளவாட விற்பனை திட்டத்தின் கீழ், நவம்பர் 28, 2025 அன்று புதுதில்லியில் பாதுகாப்புத் துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் வழங்கல் மற்றும் ஏற்பு கடிதங்களில் கையெழுத்திடப்பட்டன.
நீடித்த ஆதரவு என்பது உதிரிபாகங்கள், உபகரணங்கள், பயிற்சி மற்றும் தொழில்நுட்ப ஆதரவு போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ளதுடன், பழுதுபார்த்தல் மற்றும் புதிய பாகங்களை மாற்றியமைத்தல் மற்றும் காலமுறை பராமரிப்பு ஆய்வு வசதிகளை கட்டமைத்தல் ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய ஒரு விரிவான தொகுப்பாகும். இந்த வசதிகளை உள்நாட்டில் மேம்படுத்துவது, நீண்ட கால அடிப்படையிலான திறன் மேம்பாட்டையும் உறுதி செய்கிறது. மேலும், இது போன்ற நடவடிக்கைகள் அமெரிக்க அரசை முற்றிலும் சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்கும். இதனால், தற்சார்பு இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்துப்போகிறது. இது எம்எஸ்எம்இ நிறுவனங்கள், இதர இந்திய நிறுவனங்கள் மூலம் உள்நாட்டு தயாரிப்பு மற்றும் சேவை மேம்பாட்டிற்கு மேலும் வழிவகுக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2195822
***
SS/SV/RJ
(रिलीज़ आईडी: 2196523)
आगंतुक पटल : 4