புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அக்டோபர் மாதத்திற்கான தொழில்துறை உற்பத்தி குறியீடு குறித்த அறிக்கை டிசம்பர் 01 அன்று வெளியிடப்படவுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 28 NOV 2025 3:32PM by PIB Chennai

அகில இந்திய தொழில்துறை உற்பத்தி குறியீடு மாதந்தோறும் 28 - ம் தேதி (அல்லது 28 - ம் தேதி விடுமுறை என்றால் அடுத்த வேலை நாளில்) வெளியிடப்படும். அதன்படி, அக்டோபர் 2025 மாதத்திற்கான இந்திய தொழில்துறை உற்பத்தி குறியீடு, நவம்பர் 28, 2025 அன்று வெளியிட திட்டமிடப்பட்டது.

இருப்பினும், 2025–26 - ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான (ஜூலைசெப்டம்பர்) மொத்த உள்நாட்டு உற்பத்தியின் காலாண்டு மதிப்பீடுகள் இந்திய தொழில்துறை உற்பத்தி குறியீடு வெளியீட்டுடன் ஒத்துப்போவதால், அக்டோபர் 2025 மாதத்திற்கான அகில இந்திய தொழில்துறை உற்பத்தி குறியீடு வெளியிடும் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 2025 மாதத்திற்கான இந்திய தொழில்துறை உற்பத்தி குறியீடு, டிசம்பர் 1, 2025 அன்று மாலை 4:00 மணிக்கு வெளியிடப்படும் என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

***

(Release ID: 2195834)

SS/SV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2196522) வருகையாளர் எண்ணிக்கை : 19
இந்த வெளியீட்டை படிக்க: हिन्दी , English , Urdu