தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
உத்திரப் பிரதேச மாநிலம் (மேற்கு) மற்றும் ரூர்கியில் சேவைகளுக்கான உரிமம் வழங்கப்பட்டுள்ள பகுதிகளில் மொபைல் சேவைகளின் தரத்தை ட்ராய் மதிப்பிடுகிறது
प्रविष्टि तिथि:
28 NOV 2025 12:05PM by PIB Chennai
உத்தரப் பிரதேச மாநிலம் (மேற்கு) மற்றும் ரூர்கி நகர்புறப் பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான உரிமம் வழங்கப்பட்டுள்ள பகுதிகளில் அவற்றின் தரம் குறித்த வெளிப்படையான சோதனைகளை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) அக்டோபர் 2025 மாதத்தில் நடத்தியது. நகர்ப்புற மண்டலங்கள், முக்கிய இடங்கள், பொதுப் போக்குவரத்து மையங்கள் போன்ற பல்வேறு பயன்பாட்டு சூழல்களில் நிகழ்நேர மொபைல் சேவைகளின் தரம் குறித்த வலைதள செயல்திறனை சோதிக்கும் வகையில் பரிசோதனை நடவடிக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மதிப்பிடப்பட்ட தொழில்நுட்பங்களில் 2ஜி, 3ஜி, 4ஜி மற்றும் 5ஜி போன்ற அலைக்கற்றை சேவைகளும் இதில் அடங்கும். பல வகையான கைபேசி சாதனங்களின் திறன்களில் பயனர்களின் சேவை அனுபவத்தை பிரதிபலிக்கும் வகையில் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனைகள் குறித்த முடிவுகள் தேவையான நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட அனைத்து தொலைத்தொடர்பு சேவைகள் வழங்கும் நிறுவனங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2195734
***
SS/SV/KR
(रिलीज़ आईडी: 2195803)
आगंतुक पटल : 3