தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
ஜெய்ப்பூரில் சுரு நெடுஞ்சாலையை உள்ளடக்கிய பகுதிகள், சிகார் நகரம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில், மொபைல் சேவைகளுக்கான தரம் குறித்து ட்ராய் மதிப்பீடு
இடுகை இடப்பட்ட நாள்:
28 NOV 2025 11:46AM by PIB Chennai
தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களுக்கான பொதுத் தகவலுக்காக, அக்டோபர் 2025 மாதத்தில் ஜெய்ப்பூர்-சுரு நெடுஞ்சாலைப் பகுதிகள், சிகார் நகர்புறப் பகுதிகள், சலாசர் மற்றும் ரீங்கஸ் (ராஜஸ்தான்) உள்ளிட்ட அருகிலுள்ள பகுதிகளில் வெளிப்படையான முறையில் நடத்தப்பட்ட தொடைத்தொடர்பு சேவைகளின் தரம் குறித்த பரிசோதனை முடிவுகளை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) வெளியிட்டுள்ளது. இந்த தரப் பரிசோதனையின் நோக்கம், தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் அவற்றின் தரம் (குரல் மற்றும் தரவு ஆகிய இரண்டும்) குறித்த சரியான மதிப்பீடு மற்றும் சரிபார்ப்பு நடவடிக்கையாகும்.
ட்ராய் அனைத்து சேவை வழங்குநர்களின் மொபைல் வலையமைப்பின் நேரடி செயல்திறன், அழைப்பு அமைவின் வெற்றி விகிதம், தரவுகளின் பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம் ஆகியவற்றின் வேகம், பேச்சு தரம் போன்ற பல்வேறு முக்கிய செயல்திறன் குறியீடுகள் இந்த சோதனையின் போது மதிப்பீடு செய்யப்பட்டன. இதற்காக பல்வேறு மேம்பட்ட வசதிகள் கொண்ட கைபேசிகள் பயன்படுத்தப்பட்டதுடன், மேம்பட்ட மென்பொருள் அமைப்புகளைப் பயன்படுத்தி நிகழ்நேரக் கண்காணிப்பு செயல்பாடுகள் மூலம் அவற்றின் தரநிலைகள் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களது சேவைகளின் தரத்தை மேம்படுத்திக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையிலும், இச்சோதனையின் முடிவுகள் ட்ராய் - ன் இணையதளத்திலும், செய்தித்தாள்களிலும் வெளியிடப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2195729
***
SS/SV/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2195801)
வருகையாளர் எண்ணிக்கை : 18