நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வெளிநாட்டு சொத்துக்கள் தொடர்பாக தன்னார்வ இணக்க முறையை வலுப்படுத்த 2-வது நட்ஜ் இயக்கத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் தொடங்குகிறது

Posted On: 27 NOV 2025 1:45PM by PIB Chennai

வெளிநாட்டு சொத்துக்கள் தொடர்பாக தன்னார்வ இணக்க முறையை வலுப்படுத்த 2-வது நட்ஜ் இயக்கத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம்  தொடங்குகிறது.  இதன்படி, வரி செலுத்துவோருக்கு உரிய தகவல்கள், குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் அனுப்புவது  2025 நவம்பர் 28 முதல் தொடங்கும். 2025-26 கணக்கு ஆண்டிற்கான வருமானவரி கணக்கு தாக்கலின் போது குறிப்பிடப்படாத வெளிநாட்டு சொத்து விவரங்களை தெரிவிக்க இது ஒரு வாய்ப்பாக அமையும். இத்தகைய வரி செலுத்துவோர் தங்களின் வருமான வரிக் கணக்குகளை 2025 டிசம்பர் 31-க்குள் ஆய்வு செய்து அபராதங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டுச் சொத்துக்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் வருவாய் பற்றி சரியான விவரங்களை வரி செலுத்துவோர் தெரிவிக்க வேண்டும் என்பது இந்த இயக்கத்தின் நோக்கமாகும். இவற்றை துல்லியமாகவும், முழுமையாகவும் வருமான வரி கணக்கில் குறிப்பிடுவது வருமான வரிச்சட்டம் 1961, கருப்புப் பணம் (வெளிநாட்டு வருவாய் மற்றும் சொத்துக்களை வெளியிடாதது) மற்றும் வரி விதித்தல் சட்டம் 2015 ஆகியவற்றின்படி கட்டாயமாகும்.

மேலும் விவரங்களை வருமான வரித்துறையின்  www.incometax.gov.in  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில்  தெரிந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2195261

***

AD/SMB/KPG/SH


(Release ID: 2195575) Visitor Counter : 4