தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
தொலைத்தொடர்பு மேம்பாட்டு மையம், ரூர்க்கியில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
Posted On:
27 NOV 2025 11:55AM by PIB Chennai
மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள தொலைத்தொடர்புத் துறையின் முதன்மையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான தொலைத்தொடர்பு மேம்பாட்டு மையம், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த முன்னணி நிறுவனமான ரூர்க்கியில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, சி-டாட் நிறுவனம் ஐஐடி ரூர்க்கியில் ஒரு சிறப்பு மையத்தை அமைக்கும். இதன் முதன்மை நோக்கம், மேம்பட்ட தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களில் உள்நாட்டு ஆராய்ச்சி, புதுமை மற்றும் திறன் மேம்பாட்டை விரைவுபடுத்துவதாகும். வயர்லெஸ் தொடர்பு, குவாண்டம் தொழில்நுட்பங்கள், சைபர் பாதுகாப்பு, ஏஐ அடிப்படையிலான பயன்பாடுகள் ஆகிய துறைகளில் ஆராய்ச்சியில் இந்த மையம் வலுவான கவனம் செலுத்தும்.
ஐஐடி ரூர்க்கியின் கல்வி நிபுணத்துவத்தையும் சி-டாட்-ன் தொழில்துறை வலிமையையும் பயன்படுத்தி கல்வி-தொழில்துறை ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும், மேலும் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் இந்தியாவின் புத்தாக்க பயணத்திற்கு பங்களிக்க உதவும். இது உலகளாவிய தொலைத்தொடர்பு கண்டுபிடிப்புகளில் இந்தியாவின் தலைமைத்துவ நிலையை வலுப்படுத்தும்.
ஐஐடி ரூர்க்கியின் இயக்குனர் பேராசிரியர் கே கே பந்த் மற்றும் சி-டாட் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ராஜ்குமார் உபாத்யாய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2195196
***
SS/PKV/SH
(Release ID: 2195546)
Visitor Counter : 4