வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா-ஸ்லோவேனியா வர்த்தகக் கூட்டுக் குழு இருதரப்பு வர்த்தகக் கூட்டாண்மையை ஆய்வு செய்தது

प्रविष्टि तिथि: 26 NOV 2025 11:04AM by PIB Chennai

வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான இந்தியா-ஸ்லோவேனியா கூட்டுக் குழுவின்10-வது கூட்டம் புது தில்லியில் நடைபெற்றது. இதற்கு மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணைச் செயலாளர் திரு சாகேத் குமார், ஸ்லோவேனியாவின் வெளியுறவு மற்றும் ஐரோப்பிய விவகார அமைச்சகத்தின் பொருளாதார, கலாச்சார மற்றும் அறிவியல் ராஜீய உறவுப்பிரிவு தலைமை இயக்குநர் திரு  பீட்டர் ஜபெல்ஜ் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இந்தக் கூட்டம் இருதரப்பு பொருளாதார ஈடுபாட்டின் தற்போதைய நிலையை ஆய்வு செய்யவும், முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான எதிர்காலத் திட்டத்தை வரையவும் ஒரு தளத்தை வழங்கியது.

இந்தியாவிற்கும் ஸ்லோவேனியாவிற்கும் இடையேயான இருதரப்பு வர்த்தகம் கடந்த பல ஆண்டுகளாக ஒரு நிலையான மேல்நோக்கிய பாதையைக் காட்டியுள்ளது. இது கூட்டாண்மையின் வளர்ந்து வரும் ஆழத்தையும் மீள்தன்மையையும் பிரதிபலிக்கிறது.

இந்த விவாதங்களில் உலகளாவிய மற்றும் உள்நாட்டு பொருளாதாரத் தளத்தின் விரிவான ஆய்வும்  இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளின் மதிப்பீடு ஆய்வும்  அடங்கும். விவசாயம், ரசாயனங்கள் மற்றும் மருந்துகள், சுகாதாரம், போக்குவரத்து, எரிசக்தி, சுற்றுலா, எம்எஸ்எம்இ-கள், ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகள் மற்றும் பிற வர்த்தகம் மற்றும் வணிகம் தொடர்பான விஷயங்களில் துறைசார் ஒத்துழைப்பும் ஆய்வு செய்யப்பட்டது.

இந்தப் பயணத்தின் போது, திரு பீட்டர் ஜாபெல்ஜ், மத்திய அரசின் வர்த்தகத் துறை செயலாளர் திரு ராஜேஷ் அகர்வாலை சந்தித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2194492

***

AD/SMB/KPG/SH


(रिलीज़ आईडी: 2195078) आगंतुक पटल : 21
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी