வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் இஸ்ரேலில் ஆக்கப்பூர்வமான பயணத்தை நிறைவு செய்தார்
Posted On:
25 NOV 2025 12:10PM by PIB Chennai
இஸ்ரேலில் 2025 நவம்பர் 20 முதல் 22 வரை நடைபெற்ற இந்தியா – இஸ்ரேல் இடையேயான உத்திசார்ந்த மற்றும் பொருளாதார கூட்டாண்மையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உயர்நிலைக் கூட்டத்தில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கலந்து கொண்டு தமது ஆக்கப்பூர்வமான பயணத்தை நிறைவு செய்தார்.
இப்பயணத்தின் போது இஸ்ரேல் நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு நிர் பர்கத், நிதியமைச்சர் திரு பெசலெல் ஸ்மோட்ரிக், வேளாண் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு அவி டிக்டர் ஆகியோருடன் இருதரப்பு பேச்சு நடத்தினார். இஸ்ரேல் அதிபர் திரு ஐசக் ஹெர்சோக், பிரதமர் திரு பெஞ்சமின் நெத்தன்யாஹூ ஆகியோரையும் திரு பியூஷ் கோயல் சந்தித்துப் பேசினார்.
இஸ்ரேல் பொருளாதாரம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு நிர் பர்கத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதித்தார். இஸ்ரேல் நிதியமைச்சர் திரு பெசலெல் ஸ்மோட்ரிக்குடன் உள்கட்டமைப்பு, சுரங்கம் ஆகிய துறைகளில் இந்திய நிறுவனங்களுக்கான வாய்ப்புகள் மற்றும் இந்திய தொழிலாளர்களுக்கான வாய்ப்புகள் குறித்து அவர் விவாதித்தார். அந்நாட்டு வேளாண் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் திரு அவி டிக்டருடன் உரையாடிய திரு பியூஷ் கோயல், இஸ்ரேல் நாட்டின் நீண்டகால உணவுப் பாதுகாப்புத் திட்டம் விதை மேம்பாட்டுத் தொழில்நுட்பங்கள். உள்ளிட்டவை குறித்து விவாதித்தார். அத்துடன் இந்தியா – இஸ்ரேல் வர்த்தக கூட்டமைப்பு மற்றும் தலைமை செயல் அதிகாரிகள் கூட்டமைப்பில் திரு கோயல் பங்கேற்று உரையாற்றினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2193976
***
SS/IR/SE/SH
(Release ID: 2194285)
Visitor Counter : 7