பாதுகாப்பு அமைச்சகம்
ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படையின் தலைமையகம் கூட்டு மின்காந்த வாரியக் கூட்டத்தை நடத்தியது
Posted On:
21 NOV 2025 3:53PM by PIB Chennai
படைத் தளபதிகளின், துணைக் குழுவான கூட்டு மின்காந்த வாரியத்தின் வருடாந்திரக் கூட்டம் நவம்பர் 20 அன்று புதுதில்லியில் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைகளின் (செயல்பாடுகள்) துணைத் தலைவர் ஏர் மார்ஷல் ராகேஷ் சின்ஹா தலைமையில் நடைபெற்றது. முப்படைகளின் கூட்டு நடவடிக்கைகளில் ஒருங்கிணைப்பு எட்டப்படுவதை ஒரே நோக்கமாகக் கொண்டு, இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், அலைக்கற்றை மேலாண்மை ஆகிய துறைகளில் கூட்டு மற்றும் ஒருங்கிணைப்பை செயல்படுத்துதல் உள்ளிட்ட பல அம்சங்களை இது உள்ளடக்கியது.
வியூகங்களைக் கொண்ட போர்க்களப் பகுதியில் அலைக்கற்றையை திறம்பட பயன்படுத்துவதை உறுதிசெய்வதற்காக மின்காந்த போர்க்கள மேலாண்மை அமைப்பின் செயல் விளக்கம் இந்த நிகழ்வில் காண்பிக்கப்பட்டது. நவீன காலப் போரில் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய எதிர்கால தொழில்நுட்பங்களைப் பற்றி பேசும் ஒரு முக்கிய ஆவணமான தொழில்நுட்ப செய்தி, நிகழ்வின் போது வெளியிடப்பட்டது.
ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக நடத்தியதிலும், அதன் மூலம் கிடைத்த அனுபவத்தை கூட்டுப் பயிற்சிகள் நடத்தப்பட்டதிலும் படைகளின் முயற்சிகளை ஏர் மார்ஷல் ராகேஷ் சின்ஹா தனது உரையில் பாராட்டினார். பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள், தொழில்துறை கூட்டாளிகள் மற்றும் கல்வித்துறை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சிகளால் பல்வேறு முக்கிய தொழில்நுட்ப களங்களில் அடைந்து வரும் முன்னேற்றத்தையும் அவர் பாராட்டினார், இது பிரதமர் திரு நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியாவின் தொலைநோக்கு பார்வையை வலுப்படுத்துகிறது
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2192491
***
AD/PKV/SH
(Release ID: 2192737)
Visitor Counter : 4