அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
சுற்றுச்சூழலுக்கு உகந்த அடுத்த தலைமுறைக்கான மின்கலங்களை உருவாக்குவதில் துத்தநாக பயன்பாடு குறித்த ஆராய்ச்சி
प्रविष्टि तिथि:
21 NOV 2025 12:07PM by PIB Chennai
பெங்களூருவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அடுத்த தலைமுறைக்கான சுற்றுச்சசூழலுக்கு உகந்த மின்கலங்களை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஒரு முக்கிய படிநிலையை எட்டியுள்ளன. லித்தியம் பேட்டரிகளுக்கு அப்பால் துத்தநாகத்தைக் கொண்டு சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் கேத்தோடு பொருட்களை வடிவமைப்பதில் ஆராய்ச்சியாளர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இது மின்கலனில் உள்ள அடர் மின்சாரம் மற்றும் நிலைத்தன்மையை பராமரிப்பதில் அதிக திறனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த பல தசாப்தங்களுக்கு மேலாக மின்சாரத்தை சேமிப்பதில், லித்தியம் பேட்டரிகள் குறித்த ஆய்வுப் பணிகளில் கவனம் செலுத்தப்பட்டு வந்த நிலையில், மின்கலங்களின் செயல்பாடுகள் குறிப்பாக உயர் மின் அடர்த்தி மற்றும் சுற்றுச் சூழலுக்கு உகந்த பாதுகாப்பான பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்ட மின்கலங்களை உருவாக்குவதற்கான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த லித்தியம் பேட்டரிகளுக்கு மாற்றாக துத்தநாகம் அடிப்படையிலான மின்கலன் அமைப்புகளை உருவாக்குவதன் மூலம் உயர் மின்சார சேமிப்புத் திறன், பாதுகாப்பு, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், அதனை மேம்படுத்துவதற்கு உதவிடும்.
உலக அளவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கேத்தோடு பொருளை உருவாக்குவதில் முனைப்புடன் ஈடுபட்டு வரும் நிலையில், துத்தநாகம் அடிப்படையிலான எலக்ட்ரோலைட் அமைப்புகள் உயர் மின்சார சேமிப்புத் திறனுடன் நீண்ட காலம் பயன்படுத்தும் வகையில், மின்கலன்களை உருவாக்க முடியும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2192414
***
AD/SV/KPG/KR
(रिलीज़ आईडी: 2192547)
आगंतुक पटल : 7