குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

சத்தீஷ்கர் மாநிலம் அம்பிகாபூரில் நடைபெற்ற பழங்குடியினர் கௌரவ தினக் கொண்டாட்டத்தில் குடியரசுத்தலைவர் பங்கேற்பு

प्रविष्टि तिथि: 20 NOV 2025 2:09PM by PIB Chennai

சத்தீஷ்கர் மாநில  அரசின் சார்பில் அம்பிகாபூரில் இன்று (20.11.2025) நடைபெற்ற பழங்குடியினர் கௌரவ தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு  பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டின் சுதந்திரத்திற்காக பெரும் பங்களித்துள்ள பழங்குடியினர் சமுதாயம் குறித்த அத்தியாயம் இந்திய வரலாற்றில் இடம் பெற்றுள்ளதாக குறிப்பிட்டார். பஸ்தரில் நடத்தப்பட்ட மக்கள் நாடாளுமன்ற நிகழ்ச்சி பழங்குடியினரின் பாரம்பரியத்தையும் அவர்களது தொன்மையான கலாச்சாரத்திற்கும் எடுத்துக்காட்டாக அமைந:துள்ளது என்று கூறினார்.

பழங்குடியினரின் பாரம்பரியம், சத்தீஷ்கர், ஒடிசா, மற்றும் ஜார்க்கண்ட் மாநிலம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆழமாக வேரூரின்றி இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இந்த ஆண்டு சத்தீஷ்கர் மாநில அரசின் சார்பில் இருவார கால பழங்குடியினர் பெருமை தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள் பெரிய அளவில் நடத்தப்பட்டு வருவது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று அவர் கூறினார்.

பழங்குடியினர் சமுதாயத்தின் நலன்கள் மற்றும் மேம்பாட்டுக்காக தேசிய அளவில் கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். தார்தி அபா பழங்குடியின கிராமப்புற மேம்பாட்டுத் திட்டம் கடந்த ஆண்டு காந்தி ஜெயந்தி அன்று தொடங்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். இத்திட்டத்தின் பயன்கள் நாடுமுழுவதிலும் உள்ள 5 கோடி பழங்குடியின சகோதர சகோதரிகளை சென்றடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த 2023-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட பிரதமரின் ஜன்மன் திட்டத்தின் கீழ், குறிப்பாக பெரிதும் பாதிப்புக்குள்ளான பழங்குடியின சமுதாயக் குழுக்களின் பொருளாதார சமூக மேம்பாட்டுக்கு உதவியதாக அவர் தெரிவித்தார். இது போன்று மத்திய அரசு செயல்படுத்தி வரும் அனைத்துத் திட்டங்களும் பழங்குடியின சமுதாய மேம்பாட்டிற்கு உயர் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதை எடுத்துக் காட்டுவதாக உள்ளதென்று குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2192038

***

VL/SV/KPG/SH


(रिलीज़ आईडी: 2192253) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Gujarati , Telugu , Malayalam