மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

தென்கிழக்காசியாவில் எதிர்காலத்திற்கு தேவையான டிஜிட்டல் சுகாதார கட்டமைப்பில் தொழில்நுட்பத்தின் பங்களிப்புக் குறித்த மாநாடு

Posted On: 20 NOV 2025 12:27PM by PIB Chennai

தென்கிழக்காசிப் பிராந்தியத்தில் எதிர்காலத்திற்குத் தேவையான டிஜிட்டல் சுகாதார கட்டமைப்பில் தொழில்நுட்பத்தின் பங்களிப்புக் குறித்த மாநாடு புதுதில்லியில் நடைபெற்று வருகிறது.   3 நாள் நடைபெறும் இந்த மாநாட்டை மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய மின்னணு நிர்வாகத் துறை, தேசிய சுகாதார ஆணையம், உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்காசிய பிராந்திய அலுவலகம் மற்றும் யுனிசெப் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

இந்த மாநாட்டில் இந்தியா பங்களாதேஷ், இலங்கை, தாய்லாந்து, நேபால், மாலத்தீவுகள் மற்றும் இதர நாடுகள் பங்கேற்கின்றன. இந்த மாநாட்டில் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு வசதிகளை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்தும், வெலளிப்படையான தரநிலைகள் மற்றும் தொழில்நுட்பம் குறித்தும் பிராந்திய சுகாதார  அமைப்புகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2191993

***

VL/SV/KPG/SH


(Release ID: 2192249) Visitor Counter : 5