பாதுகாப்பு அமைச்சகம்
புதிய டிஜிட்டல் வடிவமைப்பு கொண்ட இராணுவச் சீருடைக்கான அறிவுசார் சொத்து உரிமையை இந்திய இராணுவம் பெற்றது
प्रविष्टि तिथि:
19 NOV 2025 4:15PM by PIB Chennai
புதிய டிஜிட்டல் அச்சு வடிவமைப்பு கொண்ட இராணுவச் சீருடை வெளியீட்டுக்குப் பின், இந்திய இராணுவம் 2025 ஜனவரியில் மேம்படுத்தப்பட்ட புதிய போர்க்கள சீருடையை அறிமுகப்படுத்தியது. இது நவீனமயமாக்கல், தற்சார்பு மற்றும் வீரர்களின் உடல் வசதியை மேம்படுத்தும் முயற்சியில் உருவாக்கபட்டுள்ளது.
இந்த சீருடை, புதுதில்லி வடிவமைப்பு, மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி மூலம், இராணுவ வடிவமைப்பு குழுமத்தின் வழிகாட்டுதலின் கீழ் வடிவமைக்கப்பட்டது. மூன்று அடுக்குகள் மற்றும் தொழில்நுட்ப நெசவியல் அமைப்பு கொண்ட இதில், பல்வேறு காலநிலை மற்றும் கடுமையான சூழல்களில் பயன்படுத்த உதவும் வகையில் உடல் அமைப்பியல் வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது.
இந்திய இராணுவம், புதிய டிஜிட்டல் போர்க்கள சீருடையின் வடிவத்தை வடிவமைப்பு விண்ணப்ப எண் 449667-001 என அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளது. இதன் மூலம், வடிவமைப்பு மற்றும் கேமஃப்ளாஜ் தோற்றம் ஆகிய இரண்டிற்கும் முழுமையான அறிவுசார் சொத்துரிமை இந்திய இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி தயாரித்தல் அல்லது வணிகப் பயன்பாடு மேற்கொள்ளப்படும் பட்சத்தில் காப்புரிமைச் சட்டத்தின் கீழ் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த அறிவுசார் உரிமைப் பதிவு, இராணுவச் சீருடை வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு உற்பத்தியில் புதுமை மற்றும் தற்சார்பு இந்தியா என்ற இலக்கிற்கான இந்திய இராணுவத்தின் அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2191676
(Release ID: 2191676)
***
AD/SE/SH
(रिलीज़ आईडी: 2191834)
आगंतुक पटल : 65