அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
கால்நடை ஆரோக்கியத்தை மேம்படுத்த பாரம்பரிய சிகிச்சை முறைகள் ஒழுங்குபடுத்தபட்டுள்ளன
प्रविष्टि तिथि:
19 NOV 2025 3:36PM by PIB Chennai
கால்நடைகளில் பொதுவாக ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளை சமாளிக்க உதவும் மூன்று முக்கிய பாரம்பரிய சிகிச்சை முறைகள் அறிவியல் ரீதியாக ஆய்வு செய்யப்பட்டு, தரநிலைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறைகள் வெளிப்புற பூச்சி தொல்லையை கட்டுப்படுத்துதல், பால் உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் மாடுகளுக்கு நஞ்சுக்கொடி வெளியேறாமல் தங்கும் நிலைக்கு தடுப்பு மற்றும் சிகிச்சை அளித்தல் போன்ற தேவைகளுக்கு பயன்படுகின்றன.
இந்தியாவின் பாரம்பரிய கால்நடை சிகிச்சை முறை, இரசாயன மருந்துகள் மற்றும் நோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு மாற்றாக பாதுகாப்பான மற்றும் நீடித்த தீர்வுகளை வழங்கும் திறன் கொண்டது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு உட்பட்ட தேசிய புத்தாக்க அறக்கட்டளை இந்த பாரம்பரிய முறைகளை அறிவியல் ரீதியில் பரிசோதித்து, அவற்றை கால்நடை மருத்துவத்துறையில் பயன்படுத்த உதவி செய்கிறது.
பால் உற்பத்தியில் பெண்கள் முக்கிய பங்காற்றும் நிலையில், பூச்சி தொல்லை, நஞ்சுக்கொடி வெளியேறாமல் இருத்தல், ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்சினைகள் உற்பத்தி திறனையும் வருமானத்தையும் பாதிக்கின்றன. பல தலைமுறைகளாகப் பரிமாறி வந்த இந்த பாரம்பரிய முறைகள் இப்பிரச்சினைகளுக்கு பயனுள்ள தீர்வுகளை வழங்குகின்றன.
ஒடிசா மற்றும் பீகார் மாநிலங்களில் உள்ள பாரம்பரிய சிகிச்சை நிபுணர்களிடமிருந்து பெறப்பட்ட செயல்முறைகளை அடிப்படையாகக் கொண்டு, என்ஐஎப் இந்த மூலிகை சிகிச்சை முறைகளை தரநிலைப்படுத்தியது. இதில் மருந்தின் அளவு, செயல்திறன் மற்றும் பாதுகாப்பு ஆகியவை முறையாக கண்காணிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டன.
இரசாயன மருந்துகள் ஏற்படுத்தும் பக்கவிளைவுகள் மற்றும் எதிர்ப்பு சக்தி உருவாகும் பிரச்சினைகளைத் தவிர்க்க, பாரம்பரிய மூலிகை மருந்துகள் குறைந்த செலவில், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மற்றும் நீடித்த தீர்வுகளை வழங்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2191663
(Release ID: 2191663)
***
AD/SE/SH
(रिलीज़ आईडी: 2191818)
आगंतुक पटल : 9