தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
அடுத்த தலைமுறைக்கான தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தை வடிவமைப்பதில் ஐஐஐடி தில்லியுடன் தொலைத்தொடர்பு பொறியியல் மையம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது
प्रविष्टि तिथि:
19 NOV 2025 3:02PM by PIB Chennai
மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின் தொழில்நுட்ப நிறுவனமான தொலைத்தொடர்பு மையம் தில்லி இந்திரபிரஸ்தா தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. தொலைத்தொடர்பு குறித்த ஆராய்ச்சிப் பணிகள் மற்றும் நவீன தொலைத் தொடர்பு தொழில்நுட்பத்தில் பங்களிப்பது மற்றும் சர்வதேச தரநிலைகளுக்கான நடவடிக்கைகள் தொடர்பாக இவ்விரு நிறுவனங்களும் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ள இது வகை செய்கிறது.
ஆப்டிகல் தகவல் தொடர்பு 6ஜி மொபைல் சேவை என்ற நவீன தொழில்நுட்பங்கள் இணையதளம் வாயிலான சேவைகள், தொலைத்தொடர்புத் துறையில் ஆராய்ச்சிப் பணிகளில் பரிசோதனை கட்டமைப்பு மற்றும் குறிப்பிட்ட தரநிலைகளை வடிவமைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு பொறியியல் மையத்தின் துணைத் தலைமை இயக்குநர் திரு ராகேஷ் தேசாய் மற்றும் ஐஐஐடி தில்லியின் துணை பேராசிரியர் டாக்டர் அபிஜித் மித்ரா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2191650
***
AD/SV/KPG/SH
(रिलीज़ आईडी: 2191804)
आगंतुक पटल : 5