தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் டெல்லி நகரில் தொலைத்தொடர்பு வலையமைப்பு தரத்தை மதிப்பீடு செய்துள்ளது
प्रविष्टि तिथि:
19 NOV 2025 12:08PM by PIB Chennai
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் 2025 ஜூலை மாதத்தில் டெல்லியின் பல்வேறு பகுதியில் மேற்கொண்ட சோதனை முடிவுகளை வெளியிட்டுள்ளது. டெல்லி பிராந்திய அலுவலகத்தின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனைகள் நகரின் முக்கிய சாலைகள், நகரப் பகுதிகள், நிறுவன வளாகங்கள் மற்றும் மெட்ரோ பாதைகளில் உண்மையான பயனர் அனுபவத்தைப் பதிவு செய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தன.
ஜூலை 9 முதல் 16 வரை, 858.9 கிலோமீட்டர் நகர பாதைகள், மக்கள் அதிகம் கூடும் 21 இடங்கள், 250 கிலோமீட்டர் மெட்ரோ பாதைகள் மற்றும் 3 கிலோமீட்டர் நடைபாதைகளில், டிராய் 2G, 3G, 4G மற்றும் 5G சேவைகளை மதிப்பீடு செய்தது. இச்சோதனைகள் அழைப்புகள் அமைப்பு விகிதம், அழைப்புகள் துண்டிப்பு விகிதம், குரல் தரம், தரவு பதிவிறக்கம்/பதிவேற்றம் வேகம், தாமதம் போன்ற முக்கிய அளவுகோல்கள் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன.
குரல் சேவையின் செயல்திறனில், ஏர்டெல், ரிலையன்ஸ், வோடாஃபோன் ஆகிய நிறுவங்கள் 99%–க்கு மேல் அழப்புகளின் வெற்றி விகிதத்தைப் பதிவு செய்துள்ளன. எம்டிஎன்எல் 35.29% அழப்புகளின் வெற்றி விகிதம் மற்றும் 14.64% அழப்புகள் துண்டிப்பு விகிதத்தைக் கண்டுள்ளது. தரவு சேவைகளில், சராசரி பதிவிறக்க வேகத்தில் ஏர்டெல் 173.73 Mbps, ரிலையன்ஸ் – 50.55 Mbps, வோடாஃபோன் – 64.17 Mbps வேகத்தை பதிவுசெய்துள்ளது. தரவு பதிவேற்ற வேகத்தில் ஏர்டெல் – 26.21 Mbps, ரிலையன்ஸ் – 21.61 Mbps, வோடாஃபோன் – 14.14 Mbps வேகத்தையும் பதிவுசெய்துள்ளது.
டிராய் பரிந்துரைத்த உபகரணங்கள் மற்றும் நடைமுறைகளைப் பயன்படுத்தி உண்மையான பயனர் சூழலில் இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. விரிவான அறிக்கை TRAI இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2191564
(Release ID: 2191564)
***
AD/SE/KR
(रिलीज़ आईडी: 2191729)
आगंतुक पटल : 8