புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
தேசிய தொழில்துறை வகைப்பாடு அறிக்கை 2025: மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை வெளியிட்டுள்ளது
Posted On:
18 NOV 2025 2:30PM by PIB Chennai
தேசிய மாதிரி ஆய்வு அமைப்பின் 75-வது ஆண்டு நிறைவு விழாவும் உலக புள்ளியியல் தினம் 2025-ம் உதய்பூரில் இன்று (18.11.2025) நடைபெற்றது. இதையொட்டி, தேசிய தொழில்துறை வகைப்பாடு அறிக்கை 2025-ஐ மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை வெளியிட்டுள்ளது.
புள்ளிவிவர ஆய்வுகள், கணக்கெடுப்புகள், பொருளாதார ஆய்வு, கொள்கை உருவாக்கம் ஆகியவற்றுக்கு தேசிய தொழில்துறை வகைப்பாட்டு அறிக்கை, அடிப்படை சாதனமாக பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய வகைப்பாட்டு முறை இந்தியாவில் 1962-ல் தொடங்கப்பட்டது. பின்னர் சர்வதேச தரங்கள் மற்றும் மாறிவரும் பொருளாதார நிலைமைக்கு ஏற்ப திருத்தியமைக்கப்பட்ட கால வரையறையில் இத்தகைய அறிக்கைகள் வெளியிடப்பட்டன. தற்போது 2025-ம் ஆண்டுக்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஐ நா சபையின் புள்ளிவிவரப் பிரிவால் உருவாக்கப்பட்ட அனைத்து பொருளாதார நடவடிக்கைகளின் சர்வதேச தரநிலை தொழில்துறை வகைப்பாட்டிற்கு ஏற்ப மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளது. இந்த அறிக்கையின் முழு விவரம் https://www.mospi.gov.in. என்ற அமைச்சகத்தின் இணையதளத்தில் கிடைக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2191142
***
SS/SMB/KPG/SH
(Release ID: 2191387)
Visitor Counter : 6