PIB Headquarters
azadi ka amrit mahotsav

இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியின் அம்சங்கள்

Posted On: 18 NOV 2025 11:29AM by PIB Chennai

வர்த்தக கண்காட்சிகள் மூலம் மக்களும், பொருட்களும், சிந்தனைகளும் ஓரிடத்தில் எதிர்கொள்ளும் போது, சந்தை வாய்ப்புகள் வளர்ச்சியடைந்துள்ளன என்பதை கடந்த பல ஆண்டுகளாக காண முடிகிறது. இந்த ஆண்டின் இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற கருபொருளின் கீழ் நடைபெற்றது. இந்த 44-வது வர்த்தக கண்காட்சியின் மூலம் 11 நாடுகளின் கண்காட்சியாளர்கள், 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 3500-க்கு மேற்பட்ட பங்கேற்பாளர்கள் ஒருங்கிணைந்தனர்.

புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற இந்த கண்காட்சியில் பீகார், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்கள் கூட்டாண்மை மாநிலங்களாகவும், ஜார்க்கண்ட் மாநிலம் கவனம் செலுத்தும் மாநிலமாகவும் பங்கேற்றன. இம்மாநிலங்கள் வெறும் பொருட்களை காட்சிப்படுத்துவது என்று மட்டுமின்றி இப்பிராந்தியங்களில் பொருளாதார இலக்குகளை மையமாக கொண்டு பங்கேற்றன.

அரசு துறைகளுடன் பொதுத்துறை நிறுவனங்கள், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள், சர்வதேச கண்காட்சியாளர்கள், கைவினைஞர்களின் சேகரிப்புகள் ஆகியவை ஒரே குடையின் கீழ் இடம்பெற்றதன் மூலம் சிறு உற்பத்தியாளர்கள் பாரம்பரிய கைவினை மற்றும் புதிய தொழில் முனைவோர்களுக்கான இந்தியாவின் வலிமையான தளங்களில் ஒன்றாக இக்கண்காட்சி உருவெடுத்தது. இக்கண்காட்சியில் கடந்த 25 ஆண்டுகளாக தமது குடும்பத்தினர் மார்பிள் கைவினை பொருட்கள் காட்சிப்படுத்த வருகை தருவதாக எகிப்தை சேர்ந்த இஸ்லாம் கமால் தெரிவித்தார். இங்கு தங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதாகவும், தேவை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார். தாம் இதுவரை பார்த்திராத அளவில் பாரத் மண்டபத்தில் மிகப்பெரிய கண்காட்சி இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அவரது அனுபவம் பல்வேறு சர்வதேச பங்கேற்பாளர்களின் அனுபவத்தை பிரதிபலிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2191092

***

SS/IR/RK/KR


(Release ID: 2191185) Visitor Counter : 8