சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இந்திய மருந்தியல் ஆணையம் ஜார்க்கண்ட் மாநில மருந்தியல் கவுன்சிலுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது
Posted On:
15 NOV 2025 1:38PM by PIB Chennai
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி நிறுவனமான காஜியாபாத்தில் உள்ள இந்திய மருந்தியல் ஆணையம் , ஜார்க்கண்ட் மாநில மருந்தியல் கவுன்சிலுடன் இன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது மருந்துகளின் பாதுகாப்பான மற்றும் பகுத்தறிந்த பயன்பாட்டை ஊக்குவித்தல், மருந்தியல் கண்காணிப்பு மற்றும் ஜார்க்கண்ட் மாநிலம் முழுவதும் நோயாளி பாதுகாப்பு முயற்சிகளை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட கூட்டு முயற்சிகளை வலுப்படுத்துகிறது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய மருந்தியல் ஆணையத்தின் செயலாளர் மற்றும் அறிவியல் இயக்குநர் டாக்டர் வி கலைசெல்வன், ஜார்க்கண்ட் மாநில மருந்தியல் கவுன்சிலின் பதிவாளர் மற்றும் செயலாளர் திரு பிரசாந்த் குமார் பாண்டே ஆகியோர் இரு நிறுவனங்களின் பிரதிநிதிகளின் முன்னிலையில் கையெழுத்திட்டனர்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் தொழில்முறை ஈடுபாட்டை மேம்படுத்துவதுடன் பரந்த பங்கேற்பை ஊக்குவிக்கும். மாநிலத்தில் மருந்து பாதுகாப்பு கண்காணிப்பு வழிமுறைகளை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முயற்சிகளுக்கு இந்திய மருந்தியல் ஆணையம் தொழில்நுட்ப வழிகாட்டுதலையும் நிபுணர் ஆதரவையும் வழங்கும்.
***
SS/PVK/SH
(Release ID: 2190352)
Visitor Counter : 5