சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் 32-வது நிறுவன தினம் கொண்டாடப்பட்டது

இடுகை இடப்பட்ட நாள்: 14 NOV 2025 8:15PM by PIB Chennai

சென்னையிலுள்ள தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம், தனது 32-வது நிறுவன தினத்தை நவம்பர் 12, 2025 அன்று கொண்டாடியது. இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, டிசம்பர் 2025 இல் சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருக்கும் இந்திய சர்வதேச அறிவியல் விழா 2025-க்கான முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வு விழாவின் முறையான தொடக்கத்தைக் குறித்ததுடன், அதன் கருப்பொருளான "அறிவியல் முதல் செழிப்பு வரை" என்பதையும் அறிமுகப்படுத்தியது. புவி அறிவியல் அமைச்சகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, உயிரி தொழில்நுட்பத் துறை, விண்வெளித் துறை, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், அணுசக்தித் துறை மற்றும் விஞ்ஞான் பாரதி ஆகியவை இணைந்து ஐஐஎஸ்எஃப் 2025-ஐ ஏற்பாடு செய்துள்ளன.

தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற்ற முன்னோட்ட கருத்தரங்கு, அறிவியலை சமூகத்திற்கு எடுத்துச் செல்வதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது மற்றும் இளைஞர்களிடையே ஆர்வத்தையும் புதுமையையும் தூண்டியது. மேலும் அறிவியல் முன்னேற்றங்கள் தேசிய வளர்ச்சி, நிலைத்தன்மை மற்றும் தற்சார்பு இந்தியாவிற்கு எவ்வாறு பங்களிக்கின்றன என்பதையும் எடுத்துரைத்தது. சமூகத்திற்கான அறிவியல், நவீன அறிவியலுடன் பாரம்பரிய அறிவை ஒருங்கிணைத்தல், நிலைத்தன்மை மற்றும் நீலப் பொருளாதாரத்திற்கான அறிவியல் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மூலம் தற்சார்பு இந்தியா  உள்ளிட்ட ஐஐஎஸ்எஃப் 2025 இன் முக்கிய அம்சங்களையும் இந்த நிகழ்வு எடுத்துக்காட்டியது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2190209

***

SS/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2190242) வருகையாளர் எண்ணிக்கை : 24
இந்த வெளியீட்டை படிக்க: English