சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

44-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் அரங்கை மத்திய சுகாதாரத் துறை செயலாளர் திறந்து வைத்தார்

Posted On: 14 NOV 2025 3:47PM by PIB Chennai

பாரத் மண்டபத்தில் இன்று நடைபெறும் 44-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் (ஐஐடிஎஃப்) சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சுகாதார அரங்கை மத்திய சுகாதாரத் துறை  செயலாளர் திருமதி புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் சுகாதார சேவைகள் தலைமை இயக்குநர் டாக்டர் சுனிதா சர்மா; இணைச் செயலாளர் திரு சவுரப் ஜெயின் மற்றும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

"ஆரோக்கியமான இந்தியா சிறந்த இந்தியா" என்ற கருப்பொருளில் இந்த ஆண்டு அரங்கம், சுகாதாரக் கொள்கைகளை வடிவமைப்பதிலும், ஆரோக்கியமான மற்றும் வலுவான தேசத்தை உருவாக்க விரிவான சுகாதார சேவைகளை வழங்குவதிலும் அமைச்சகத்தின் முக்கிய பங்கை எடுத்துக்காட்டுகிறது.

கூட்டத்தில் உரையாற்றிய திருமதி ஸ்ரீவஸ்தவா, தேசிய சுகாதார இலக்குகளை அடைவதையும் நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் இணங்குவதையும் நோக்கமாகக் கொண்ட பல முக்கிய முயற்சிகளை அமைச்சகம் முன்னெடுத்து வருவதாகக் கூறினார். "சமீபத்தில் தொடங்கப்பட்ட ஆரோக்கியமான பெண் வலிமையான குடும்பம், 11 கோடி மக்களைச் சென்றடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனுடன், இளைஞர்களுக்கான புகையிலை கட்டுப்பாடு திட்டம், காசநோய் இல்லா பாரதம் இயக்கம்  மற்றும் உறுப்பு தானத்திற்கான தேசிய பிரச்சாரம் போன்ற முயற்சிகளும் ஒரே நேரத்தில் முன்னேறி வருகின்றன," என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2190020 

***

SS/PKV/AG/SH


(Release ID: 2190186) Visitor Counter : 4