வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கச்சா எண்ணெய் விலை குறைவு காரணமாக மொத்த விற்பனை விலைக் குறியீட்டு எண் குறைந்துள்ளது

प्रविष्टि तिथि: 14 NOV 2025 12:00PM by PIB Chennai

நாட்டின் மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் அடிப்படையிலான வருடாந்தர பணவீக்க விகிதம் அக்டோபர் மாதத்தில் (-) 1.21% ஆக உள்ளது. கடந்த மாதத்தில் எதிர்மறை விகிதத்தில் உள்ள இந்த பணவீக்க விகிதத்திற்கு உணவுப் பொருட்கள், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, மின்சாரம் மற்றும் அடிப்படை உலோக உற்பத்தி போன்றவற்றின் விலைகள் குறைந்துள்ளதே காரணமாகும். அனைத்துவித பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக கடந்த 3 மாதங்களில் மொத்த விற்பனை விலை குறியீடு மற்றும் பணவீக்க விகிதம் குறைந்துள்ளது.

கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் மொத்த விற்பனை விலைக்குறியீடு (-) 3.13% ஆகவும், உணவுப் பொருள் சாராத பொருட்களின் குறியீடு (-) 1.73% ஆகவும் குறைந்துள்ளது.

இந்த மொத்த விற்பனை விலை குறியீட்டெண்களை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் தொகை மாதந்தோறும் 14-ம் தேதி வெளியிட்டு வருகிறது.  இந்த மொத்த விற்பனை விலை குறியீட்டெண் பல்வேறு நிறுவனங்களின் தரவுகளை ஆதாரமாகக் கொண்டும் நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உற்பத்தி அலகுகளின் தரவுகளை ஆதாரமாகக் கொண்டும் கணக்கிடப்பட்டு வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2189914 

***

SS/SV/KPG/SH


(रिलीज़ आईडी: 2190180) आगंतुक पटल : 37
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi