சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் சிறப்பு இயக்கம் 5.0-வை வெற்றிகரமாக நிறைவு செய்தது
Posted On:
13 NOV 2025 12:48PM by PIB Chennai
மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் மற்றும் அதன் சார்பு நிறுவனங்கள் 2025 அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31 வரை நடைபெற்ற சிறப்பு இயக்கம் 5.0-வை வெற்றிகரமாக நிறைவு செய்தது. அப்போது ஆவண மேலாண்மை நடவடிக்கையில் 100 சதவீத இலக்கை எட்டியது. மொத்தம் 18,616 பழைய நேரடி மற்றும் மின் கோப்புகளை ஆய்வு செய்தது. தேசிய நெடுஞ்சாலையின் சுங்கச் சாவடிகள், அலுவலகங்கள், கட்டுமான இடங்கள், சாலையோர உணவகங்கள், பேருந்து நிறுத்தங்கள், மேம்பாலங்கள் உள்ளிட்ட 15,000-க்கும் மேற்பட்ட இடங்களில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டது.
மேலும், பொதுமக்களின் குறைகளுக்கு 99 சதவீதம் அளவிற்குத் தீர்வு கண்டது. 1,147 பொதுமக்களின் குறைகள் தொடர்பான 522 பொதுமக்களின் மேல்முறையீடுகளுக்கும் தீர்வு கண்டது. அத்துடன் நிலுவையில் இருந்த 730 நாடாளுமன்ற உறுப்பினர்களின் குறிப்புகளில் 671 குறிப்புகளுக்குத் தீர்வு காணப்பட்டது. இக்காலகட்டத்தில் பிரதமர் அலுவலகத்தில் 13 குறிப்புகளில் 10 குறிப்புகளுக்குத் தீர்வு காணப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2189567
***
SS/IR/KPG/KR
(Release ID: 2189686)
Visitor Counter : 5