வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பொதுத் துறை நிறுவனங்களில் தரம் மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்த இந்திய தரக் கவுன்சில் மற்றும் பெல் இணைந்து நடத்திய பயிலரங்கு

Posted On: 12 NOV 2025 6:24PM by PIB Chennai

பொதுத் துறை நிறுவனங்களிடையே  தரம் மற்றும் செயல்பாட்டுத் திறனை  மேம்படுத்தும் நோக்குடன், இந்தியத் தரக் கவுன்சில் மற்றும் பாரதத மிகு மின் நிறுவனம்  இணைந்து, பொதுத் துறை நிறுவனங்களுக்கான குன்வத்தா மந்தன் என்ற ஒருநாள் பயிலரங்கத்தை புதுதில்லியில் நடத்தின.

 இதில் பிஈஎல், பிபிசிஎல், ஐஓசிஎல் உள்ளிட்ட மத்தியப் பொதுத் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு, சிக்ஸ் சிக்மா, டிஜிட்டல் ஆட்டோமேஷன், மொத்த உற்பத்திப் பராமரிப்பு போன்ற சிறந்த தர மேலாண்மை நடைமுறைகளைப் பரிமாறிக் கொண்டன.

இந்திய தரக் கவுன்சில் தலைவர் திரு ஜாக்சே ஷா, பொதுத் துறை நிறுவனங்களில் தரமான கலாச்சாரத்தை மேம்படுத்துவதில் இந்த நிகழ்வு ஆக்கபூர்வமானது என்று தெரிவித்தார். பெல் இயக்குநர் திரு எஸ் எம் ராமநாதன், சமூகப் பொருளாதார மேம்பாட்டில் பொதுத் துறை நிறுவனங்களின் பங்கை வலியுறுத்தினார்.

என்ஏபிசிபி தலைவர் டாக்டர் ரவி பி சிங், இந்தியத் தர அமைப்புகளின் சர்வதேசத் தரத்தை உயர்த்த, நம்பகமான தர உத்தரவாதக் கட்டமைப்பு அவசியம் என்றார்.

இந்த நிகழ்வு, ஒத்துழைப்பை வலுப்படுத்தி, வளர்ச்சியடைந்த இந்தியா 2047 இலக்கிற்குப் பங்களிக்கக்கூடிய உலகளாவிய போட்டித்தன்மை கொண்ட நிறுவனங்களை உருவாக்க உறுதியளித்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2189316                

***

SS/VK/SH


(Release ID: 2189474) Visitor Counter : 6