நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அரசு அங்கீகரிக்கப்பட்ட சோதனை மையங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

Posted On: 12 NOV 2025 4:13PM by PIB Chennai

நுகர்வோர் விவகாரங்கள் துறை, சட்டரீதியான அளவீட்டு விதிகளைத் திருத்தி, தனியார் நிறுவனங்களை அரசு அங்கீகரிக்கப்பட்ட சோதனை மையங்களாக அங்கீகரிக்க ஆன்லைன் விண்ணப்பச் செயல்முறையைத் தொடங்கியுள்ளது. இதன்மூலம், பரிவர்த்தனைகளுக்காகப் பயன்படுத்தப்படும் எடை மற்றும் அளவிடும் கருவிகளைச் சரிபார்க்கும் பணியில் தனியார் துறையும் பங்கேற்க முடியும்.

இந்த முயற்சி, இந்தியாவின் சரிபார்ப்புத் திறனை அதிகரித்து, காத்திருப்பு நேரத்தைக் குறைத்து, வர்த்தகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கான பொது–தனியார் கூட்டு ஒத்துழைப்பு மாதிரியைப் பிரதிபலிக்கிறது.

தகுதியான சோதனை வசதிகள் மற்றும் பணியாளர்கள் கொண்ட தனியார் ஆய்வகங்கள் நவம்பர் 30, 2025 வரை https://doca.gov.in/gatc என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் கருவி வகைக்கு ரூ.2 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட சோதனை மையங்கள், புதிய விதிகளின்படி நிர்ணயிக்கப்பட்ட சீரான சரிபார்ப்புக் கட்டணங்களைப் பெறலாம்.

இந்த நடவடிக்கை, நாட்டின் சுகாதார, போக்குவரத்து, எரிசக்தித் துறைகளில் துல்லியமான அளவீடுகளை உறுதிசெய்து, தற்சார்பு இந்தியா நோக்கத்தை வலுப்படுத்துகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2189198

***

SS/VK/SH


(Release ID: 2189457) Visitor Counter : 10