ஜல்சக்தி அமைச்சகம்
ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் 'மக்கள் பங்கேற்பு' குறித்த ஒருநாள் பயிலரங்கம்
Posted On:
12 NOV 2025 4:10PM by PIB Chennai
ஜல் சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை , ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் "சமூக ஈடுபாட்டை ஊக்குவிப்பதற்கான தகவல் தொடர்பு மற்றும் பி.ஆர்.ஏ. கருவிகள்" என்ற தலைப்பில் ஒருநாள் பயிலரங்கத்தை புதுதில்லியில் உள்ள ஸ்கோப் வளாகத்தில் ஏற்பாடு செய்தது.
இந்நிகழ்ச்சிக்கு மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் திரு சி ஆர் பாட்டீல் தலைமை வகித்தார். குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர் திரு அசோக் கே கே மீனா, தேசிய ஜல் ஜீவன் இயக்கத்தின் கூடுதல் செயலாளர் மற்றும் பணி இயக்குநர் திரு கமல் கிஷோர் சோன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.
மத்திய அமைச்சர் திரு சி ஆர் பாட்டீல் பேசுகையில் தூய்மை இந்தியா மற்றும் ஜல் ஜீவன் இயக்கங்கள் மூலம், 9 கோடிக்கும் அதிகமான பெண்கள் தண்ணீர் சுமக்கும் சுமையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டின்படி, ஊரக இந்தியாவில் தினமும் 5.5 கோடி ஆள்-மணி நேரம் சேமிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர் திரு அசோக் கே கே மீனா பேசுகையில், "மக்கள் வெறும் பயனாளிகள் அல்ல; அவர்கள் தங்கள் நீராதார அமைப்பின் பாதுகாவலர்கள்" என்று வலியுறுத்தினார். மேலும், ஜல் ஜீவன் இயக்கம் என்பது சமூகத்தின் உரிமையை அடிப்படையாகக் கொண்ட ஒரு திட்டமாகும் என்றும் அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2189196
***
SS/VK/SH
(Release ID: 2189438)
Visitor Counter : 9