பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறப்பு தூய்மை பிரச்சாரத்தின் கீழ் மத்திய அரசு அலுவலகங்களிலிருந்து கழிவுகளை அப்புறப்படுத்தியதன் மூலம், 2021 முதல் சுமார் ரூ. 4085 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது: டாக்டர் ஜிதேந்திர சிங்

Posted On: 09 NOV 2025 5:52PM by PIB Chennai

சிறப்பு தூய்மை பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பல்வேறு மத்திய அரசு அலுவலகங்களிலிருந்து மின்னணு கழிவுகள் உட்பட கழிவுகளை அப்புறப்படுத்தியதன் மூலம், 2021 முதல்  மொத்தம் ரூ. 4085 கோடி மற்றும் 24 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை இணையமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், அணுசக்தி, விண்வெளி, பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங்  தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக, வழக்கமான கழிவுகளைத் தவிர, அலுவலகங்களில் ஏராளமான மின்னணு கழிவுகளும் இருப்பதை டாக்டர் ஜிதேந்திர சிங் குறிப்பட்டு, அவற்றை அப்புறப்படுத்தி  வருவாய் ஈட்டுவது மட்டுமல்லாமல், மறுசுழற்சி மூலம் மாற்றப்பட்டு கழிவுகளிலிருந்து செல்வத்தை உருவாக்கவும் முடியும், என்று கூறினார். கடந்த ஆண்டு சிறப்பு தூய்மை பிரச்சாரம் 4.0-ன் முடிவில் கிட்டத்தட்ட ரூ. 3,300 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாகவும், இந்த ஆண்டு அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31 வரை நடைபெற்ற சிறப்பு பிரச்சாரம் 5.0 மூலம் ரூ. 788.53 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன் விளைவாக, இதுவரை மொத்த வருவாய் ரூ. 4085 கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது என்றார்.

சிறப்பு தூய்மை பிரச்சாரத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க விளைவாக, உற்பத்தி பயன்பாட்டிற்காக 231.75 லட்சம் சதுர அடி இடம் விடுவிக்கப்பட்டது. இது பற்றி டாக்டர் ஜிதேந்திர சிங் கூறுகையில், கழிவுகளை விற்றதன் மூலம் சம்பாதித்த மொத்த தொகைஒரு மெகா விண்வெளி பயணத்தின் மொத்த பட்ஜெட் அல்லது பல சந்திரயான் விண்வெளி பயணங்களின் மொத்த பட்ஜெட்டுக்கு இணையாக  இருக்கலாம், என்று கூறினார். அதே நேரத்தில் விடுவிக்கப்பட்ட மொத்த இடம் ஒரு பெரிய மால் அல்லது பொருளாதார நடவடிக்கைகளுக்கான வேறு சில பெரிய கட்டமைப்பைக் கொண்டுவர போதுமானதாக இருந்தது என்றார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2188051

***

SS/BR/RK


(Release ID: 2189293) Visitor Counter : 6