பிரதமர் அலுவலகம்
கோவாவில் நடைபெற்ற அயர்ன்மேன் 70.3 போன்ற நிகழ்வுகளில் அதிகரித்து வரும் இளைஞர்களின் பங்கேற்புக்கு பிரதமர் வரவேற்பு
அயர்ன்மேன் டிரையத்லான் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்காக திரு அண்ணாமலை, திரு தேஜஸ்வி சூர்யா ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தார்
प्रविष्टि तिथि:
09 NOV 2025 10:00PM by PIB Chennai
கோவாவில் நடைபெற்ற அயர்ன்மேன் 70.3 போன்ற நிகழ்வுகளில் இளைஞர்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுபோன்ற நிகழ்வுகள் ஃபிட் இந்தியா இயக்கத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதாக திரு மோடி கூறினார். "பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். அயர்ன்மேன் டிரையத்லான் பந்தயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களில் நமது கட்சியின் இளம் கட்சி நண்பர்களான திரு அண்ணாமலை,
திரு தேஜஸ்வி சூர்யா ஆகியோர் அடங்குவர் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று திரு மோடி கூறினார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:
"கோவாவில் இன்று நடைபெற்ற அயர்ன்மேன் 70.3 போன்ற நிகழ்வுகளில் நமது இளைஞர்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். இதுபோன்ற நிகழ்வுகள் ஃபிட் இந்தியா (#FitIndia) இயக்கத்திற்கு பெரும் பங்களிக்கின்றன. கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். நமது கட்சியின் இளம் சகாக்களான திரு அண்ணாமலையும் திரு தேஜஸ்வி சூர்யாவும் அயர்ன்மேன் டிரையத்லானை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களில் இடம்பெற்றிருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
@annamalai_k
@Tejasvi_Surya”
***
(Release ID: 2188150)
SS/BR/ RK
(रिलीज़ आईडी: 2189268)
आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam